அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பா? சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 01- அனிதாவின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்திற்கு அரசு அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பாகச் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே காரசார விவா தம் நடைபெற்றது.

ஜனநாயக முறையில் அமைதியாக நடைபெற விருந்த நினைவேந்தல் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அனிதா மரணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும், அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி கிறிஸ்தவ கோயில் கொடியேற்றம் ஏற்ெகனவே நடந்து முடிந்துவிட்ட சூழலில், அமைதியான கூட்டத்திற்கு அனுமதி மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் எந்தவித அரசியலும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார். எனினும், நினைவேந்தல் கூட்டத்தை நடத்துவதற்கு ஏதுவான மாற்று இடத்தைத் தேர்வு செய்ய அரசுத் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சிந்து நதி : பன்னாட்டு நடுவர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா!

புதுடில்லி, செப். 01- ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தி ஹேக் நகரில் (நெதர்லாந்து) அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு நடுவர் நீதிமன்றம் சிந்து நதி நீர் தொடர்பாக பிறப்பித்துள்ள உத்தரவை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது. இந்த விவகாரத்தில் தீர்ப்பளிக்க அல்லது தலையிட அந்த அமைப்புக்கு எவ்வித சட்டப்பூர்வ அதிகார வரம்பும் இல்லை.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விதிகளுக்குப் புறம்பாக, உலக வங்கியால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட இந்த நடுவர் நீதிமன்றத்தின் செயல்பாடுகளையோ, அதன் தீர்ப்புகளையோ இந்தியா ஒருபோதும் அங்கீகரித்தது இல்லை. எனவே, இந்த நீதிமன்றத்தில் இந்தியா ஆஜராகவும் இல்லை; அதன் முந்தைய அறிவிப்புகளை ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

இந்தியாவின் இறையாண்மை சார்ந்த முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கவோ அல்லது தீர்ப்பளிக்கவோ இந்த நடுவர் மன்றத்துக்கு எந்த உரிமையும் இல்லை. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா எடுத்த முடிவு தொடர்ந்து அமலில் இருக்கும்.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *