சென்னை, செப்.1 தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. ஊழல் வழக்கில் சிக்கும் அரசு அதிகாரிகள் மீது தொடரப்படும் வழக்குகளை விசாரிக்க இந்த நீதிமன்றங்களின் நீதிபதிகள் சார்பு நீதிபதிகளாவர். இந்நிலையில் இந்த நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதிகள் தகுதிகள் உள்ள நீதிபதிகள் விசாரிக்கும் வகையில் தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அதன் அடிப்படையில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, விழுப்புரம், சேலம், சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான நீதிமன்றங்களின் நீதிபதிகள் மாவட்ட நீதிபதிகளாக இருப்பார்கள்.
