‘அ.முத்துலிங்கம் இயல் விருது’க்கு ஓவியர் டிராட்ஸ்கி மருது தேர்வு

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

தமிழ் இலக்கிய உலகில் வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க பன்னாட்டு அங்கீகாரங்களில் ஒன்று, கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் ‘அ.முத்துலிங்கம் இயல் விருது’. உலக அளவில் தமிழ் மொழி, இலக்கியம், கலை மற்றும் ஆய்வுகளுக்கு வாழ்நாள் பங்களிப்பு அளித்த சான்றோர்களைக் கவுரவிக்கும் இந்த விருது, 2025ஆம் ஆண்டுக்காகப் பிரபல காட்சிப்பதிவாளர் மற்றும் ஓவியர் டிராட்ஸ்கி மருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்து வடிவில் இருக்கும் இலக்கியத்தை, காட்சி வடிவத்துக்கு நகர்த்திச் சென்ற ஒரு முன்னோடிக்கு இயல் விருது வழங்கப்பட்டிருப்பது விருதின் எல்லையை விரிவுபடுத்தியுள்ளது.

கோடுகளால் இயங்கும் கலைஞன்: தமிழ் இதழியல், சினிமா, அனிமேசன் மற்றும் கலை உலகுக்கு அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிரப் பங்காற்றி வருபவர் ஓவியர் டிராட்ஸ்கி மருது. நவீன ஓவியத்தின் சாத்தியக்கூறுகளைத் தமிழ்ச் சூழலில் முதன்முதலில் காட்சிப்படுத்தியவர்களில் முக்கியமானவர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *