ஊழல் வழக்குகளை விசாரிக்கும் 8 சிறப்பு நீதிமன்றங்கள் தரம் உயர்வு

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.1 தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. ஊழல் வழக்கில் சிக்கும் அரசு அதிகாரிகள் மீது தொடரப்படும் வழக்குகளை விசாரிக்க இந்த நீதிமன்றங்களின் நீதிபதிகள் சார்பு நீதிபதிகளாவர். இந்நிலையில் இந்த நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதிகள் தகுதிகள்  உள்ள நீதிபதிகள் விசாரிக்கும் வகையில் தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதன் அடிப்படையில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, விழுப்புரம், சேலம், சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான நீதிமன்றங்களின் நீதிபதிகள் மாவட்ட நீதிபதிகளாக இருப்பார்கள்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *