ஜார்கண்டில் புதிய அணுகுமுறை சிறைக் கைதிகள் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்ய அனுமதி மாலை 6 மணிக்குள் திரும்ப உத்தரவு

இணையவழி கையெழுத்து இயக்கம்

ராஞ்சி, ஆக. 31-  ஜார்க்கண்ட் மாநிலத் தில் கைதிகள், தங்கள் குடும்பத்தினரின் வாழ் வாதாரத்துக்காக பகல் நேரத்தில் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்துவிட்டு, மாலையில் சிறைக்கு திரும்ப அம் மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.

ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறை, ஹசாரிபாகில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் மத்திய சிறை, கிழக்கு சிங்பூமில் உள்ள ககிடிஹ் மத்திய சிறை மற்றும் தும்பா மத்திய சிறை ஆகிய 4 மத்திய சிறைகளில் உள்ள திறந்த மற்றும் பகுதியளவு திறந்த முகாம்கள் மூலம் இந்த திட்டம் அறிமுகப் படுத்தப்படும். ஆனால் இத்திட்டம் அனைத்து கைதிகளுக்குமானதல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட சில கைதிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங் கப்படும்.

சிறைத்துறை அய்.ஜி. சுதர்ஷன் மண்டல் கூறும்போது, “திறந்த அல்லது பகுதியளவு திறந்த கைதிகள் தங்கும் அறை அமைப்பின் கீழ், கைதிகள் காலை 6 அல்லது 7 மணியளவில் வெளியே சென்று வேலை செய்து, தங்கள் குடும்பங்களுக்காகச் சம்பாதித்து, சுமார் 12 மணி நேரத்துக்குப் பிறகு சிறைக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். இந்த வசதி நகர்ப்புற மய் யங்களில் இருப்ப தால், கைதிகளுக்கு வாழ் வாதாரம் ஈட்ட நியாய மான வாய்ப்பு கிடைக்கும்.

இந்தத் திட்டத்துக்கு தகுதியானவர்களை தீர்மானிக்க, ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறை வகுக்கப்படும். நன்னடத்தை மற்றும் சிறை விதிகளைக் கடைப் பிடித்தல் ஆகியவை முக்கியத் தகுதி அளவு கோல்களில் அடங்கும்” என்றார்.

இதுகுறித்து அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “கைதிகள் வெளியில் சென்று பணிபுரிய அனுமதிக்கும் திட்டத்துக்கு மாநில அமைச்சரவை அண்மை யில் ஒப்புதல் அளித்தது. இது, சிறைகளில் சீர்திருத்தங்களை வலுப் படுத்தவும், கைதிகள் மீண்டும் சமூகத்தில் ஒருங் கிணைவதற்கு உதவ வும் மாநில அரசு மேற் கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்” என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *