1,643 மாணவர்களை மீட்கச் செய்த சாதுரியமான செயல்: நேபாளத்தில் வெள்ளப் பெருக்கின் போது துரிதமாகச் செயல்பட்டு உயிர்களைக் காத்த பள்ளித் தலைமை ஆசிரியர்!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

காத்மாண்டு, ஆக. 31- நேபாளத்தின் தாதிங்) மாவட்டத்தில் அமைந்துள்ள சிறி பஞ்ச கன்னியா இடைநிலைப் பள்ளியில்  தலைமை ஆசிரியரின் துரிதமான மற்றும் சாதுரியமான செயலால் 1,643 மாணவ-மாணவிகள் அசம்பாவித இன்றிப் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

பள்ளி வகுப்புகள் வழக் கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அருகே உள்ள ஆற்றில் நீர்மட்டம் அபாயகரமான அளவில் உயர்ந்து கொண்டிருப்பதை அப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேஷ் குமார் ஷ்ரெஸ்தா கவனித்தார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர், சற்றும் தாமதிக்காமல் உடனடி யாகப் பள்ளி மணியை அடித்து வகுப்புகளை இடைநிறுத்தம் செய்தார்.

அப்பகுதியில் தொலைபேசி உள்ளிட்ட தகவல் தொடர்பு அமைப்புகள் முற்றிலும் செயலிழந்த நிலையிலும், அவர் மனமுறியாமல் ஆசிரி யர்கள் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்களை ஒருங் கிணைத்து அவசரகால மீட்புக் குழுவை அமைத் தார். வெள்ள நீர் பள்ளி வளாகத்தைச் சூழ்வதற்குள், 1,643 மாண வர்களையும் பாதுகாப்பாக அருகில் உள்ள உயரமான மலைப் பகுதிக்கு அழைத் துச் சென்று தங்க வைத் தார்.

அவர் மாணவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற சில நிமிடங்களிலேயே, பள்ளி வகுப்பறைகளுக்குள் பல அடி உயரத்திற்குச் சீறிப்பாய்ந்த வெள்ள நீர் சூழ்ந்தது. ஒரு நொடி தாமதித்திருந்தாலும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கக் கூடிய சூழலில், சாமர்த்திய மாகவும் சுயநலமின்றியும் செயல்பட்டு அத்தனை குழந்தைகளின் உயிரையும் மீட்ட தலைமை ஆசிரி யர் கணேஷ் குமார் ஷ்ரெஸ்தாவிற்கு நேபாள அரசும், சமூக வலைதளங்களில் பொதுமக்களும் தங்களது நெஞ்சார்ந்த பாராட்டு களைத் தெரிவித்து வருகின்றனர். இதில் மிகவும் சோகமான தகவல் என்னவென்றால் தலைமை ஆசிரியரின் குடும்பம் மற்றும் பல மாணவர்களில் பெற் றோர்க்ள் வெள்ளத்தில் பலியாகி விட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *