புதுடில்லி, ஆக.25 டில்லியில் தேர்வு முறை கேடுகளைக் கண்டித்து போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக் குகளை ரத்து செய்வது உள்ளிட்ட வாக்குறுதிகளை ஒன்றிய அரசு இதுவரை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம் கடந்த ஜூலை 25 அன்று முடிவுக்கு வந்தது. அப்போது, போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ஒன்றிய அரசு வழங்கியிருந்தது. இருப்பினும், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அரசு தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதாக அக்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி டில்லியில் பிரமாண்ட ‘இளைஞர் பேரணி’ நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியானது இந்தியா கேட் பகுதியில் தொடங்கி புதுடில்லி காவல் தலைமையகம் வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வு தொடர்பான விவகாரங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும், ஏராளமான இளைஞர்களும் இந்த பேரணியில் பெருந்திரளாகப் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
