சென்னையில் பல ஆண்டுகளாக கேட்பாரற்றுக் கிடந்த 5,543 வாகனங்கள் ஏலம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 30– சென்னையில் பல ஆண்டுகளாக சாலை யோரங்கள் மற்றும் தெருக்களில் கேட்பாரற்று, உரிமை கோரப்படாமல் நிறுத்தப்பட்டிருந்த 5,543 வாகனங்களை காவல்துறையினர் கண்டெடுத்து கைப்பற்றி யுள்ளனர். அவை ஏலம் விடப்பட உள்ளன.

சென்னையில் கேட் பாரற்று கிடக்கும் வாக னங்களை கண்டறிந்து, உரியவர்களிடம் ஒப் படைக்க வேண்டும் என்று காவல் ஆணை யர் அமல்ராஜ் காவல்துறை யினருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணையர்கள் தலைமையில் காவல்துறை யினர் தங்கள் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத் தினர்.

அப்போது, நீண்ட காலமாக சாலையோரம், தெருக்களில் கேட்பாரற்று கிடந்த 5,543 வாகனங்கள் கண்டெடுக்கப்பட்டன. உரிமையாளர்கள் யாரும் உரிமை கோராத நிலையில், இந்த வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்காக அவை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதில் மாநகராட்சி மூலம் மதிப்பீடு செய்யப் பட்ட 1,936 வாகனங்கள் 28.8.2026 முதல் மின் னணு ஏலத்தில் விடும் பணி தொடங்கி உள்ளது. மீதமுள்ள 3,607 வாகனங்களும் மதிப்பீடு செய்யப்பட்டு, மின்னணு ஏலத்தில் விடுவதற்கான நடவடிக்கைகள் நடை பெற்று வருகின்றன.

அவற்றுக்கான ஏல தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இதற் கிடையே, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் போதைப்பொருள் வழக்குகளில் கைப்பற்றப் பட்ட 81 இருசக்கர வாகனங்கள், 12 மூன்று சக்கர வாகனங்கள், 9 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 102 வாகனங் களும் ஏலம் விடப்பட உள்ளன.

இதற்காக சம்பந்தப் பட்ட நீதிமன்றங்களின் உத்தரவுகள் மற்றும் வாகன மதிப்பீடுகள் பெறப்பட்டு, இணையதளம் மூலம் மின்னணு ஏலம் நடத்து வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *