லால்குடி, ஆக. 31– லால்குடி கழக மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 29.08.2026 சனிக்கிழமை காலை 06.00 மணியளவில். லால்குடி பெரியார் திருமண மாளிகையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
மாவட்டக் கழகத் தலைவர் வீ.அன்புராஜா, தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஆ.அங்கமுத்து, அனை வரையும் வரவேற்று பேசினார்.
மாவட்டக் காப்பாளர்கள் தே.வால்டேர், ப.ஆல்பர்ட், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கிப் பேசினார்.
தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் வி.சி.வில்வம், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, கருத்துரையாற்றினர்.
மாவட்ட துணைத் தலைவர் புள்ளம்பாடி திருநாவுக்கரசு, மாவட்ட துணைச் செயலாளர் சித்தார்த்தன், மாவட்ட மகளிரணித் தலைவர் வா.குழந்தைத்திரசா, பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் மு.செல்வி, திருவாரூர் மாவட்டச் செயலாளர் கோ.பிளாட்டோ,
மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ஆ.வான்முடி வள்ளல், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் மோ.பாபுராஜ், புள்ளம்பாடி ஒன்றியச் செயலாளர் பாடகர் பொற்செழியன், மாணவர் கழகம் பி.அஸ்வின்ராஜ், சா.பன்னீர்செல்வம், சி.வீரமணி, பாச்சூர் அசோகன், ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் ச.சண்முகசுந்தரம், தங்கதுரை, திவ்யநாதன், மோகன்,
யாகோப், பெருவளப்பூர். பி.திவ்வியநாதன், மா.வீராச்சாமி, பிரபாகரன், மு.அறிவழகன், ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகள் தெரிவித்தனர்.
மாவட்ட இளைஞரணித் தலைவர் சா.இசைவாணன், நன்றி கூறினார்.
கீழவாளாடி ஜாதி ஒழிப்பு போராட்ட வீரர் மைக்கேல், மறைவிற்கு இக்கூட்டம் வீர வணக்கத்தையும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கிறது.
அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 148 -ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை லால்குடி கழக மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து. கிளைக் கழகங்கள் தோறும் கழக இலட்சியக் கொடி ஏற்றி. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி எழுச்சியுடன் கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் -3 சென்னையில் பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் தலைமையில் நடைபெறும் தலைமை செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டங்களை லால்குடி மாவட்டம் முழுவதும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 148-ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக் கூட்டத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் கலந்து கொள்ள தேதி வழங்கும் நாளில் பெருவளப்பூரில் மிக எழுச்சியுடன் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
லால்குடி கழக மாவட்டத்தில் செப்டம்பர் இறுதிக்குள் பெரியார் கொள்கைக் குடும்பங்கள் ஒன்று கூடல் நிகழ்வு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
