சென்னை – வில்லிவாக்கம் பெரியார் பெருந்தொண்டர் கு.தங்கமணி குணசீலன் மறைவு! கழகத் தலைவர் நேரில் சென்று இறுதி மரியாதை

சென்னை, மே 4- வடசென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி மேனாள் தலைவரும், மேனாள் மாவட்டச் செயலாளர் சுயமரியாதைச் சுடரொளி அ.குணசீலனின் வாழ்விணையருமான கு.தங்கமணி நேற்று (3.5.2026) மாலை 4 மணி அளவில் மறைவுற்றார்.

இன்று (4.5.2026) காலை 8 மணிக்கு வில்லிவாக்கத்தில் உள்ள அம்மையாரது இல்லத்துக்குச் சென்ற தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கு.தங்கமணி அம்மையாரது உடலுக்கு மாலை வைத்து வீரவணக்க முழக்கத்துடன் இறுதி மரியாதை செலுத்தினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், கு.தங்கமணி குணசீலன் அவர்களின் மகள்கள் இர.ரமணி, எஸ்.பொற்கொடி, பா.அறிவுமணி, மகன்கள் கு.கவுதமன், கு.வீரமணி, மருமகன்கள் இரகுநாதன், சியாம் சுந்தர், பார்த்திபன் மற்றும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்

கு.தங்கமணி அம்மையாரின் மறை வுக்கு, ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை குடும் பத்தினர் மற்றும் தோழர்களுக்குத் தரப்பட்டது.

இந்நிகழ்வில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், ப.சீதாராமன்,  வெற்றிச்செல்வி பூங்குன்றன், கழகத் தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், காப்பாளர் கி.இராமலிங்கம், துணைத் தலைவர் நா.பார்த்திபன், பொதுக்குழு உறுப்பினர்கள் தி.செ.கணேசன், தங்க.தனலட்சுமி, பேராசிரியர் வி.டெய்சி மணியம்மை, மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் வி.கே.ஆர். பெரியார் செல்வி, வடசென்னை மாவட்ட மகளிரணித் தலைவர் த.இளவரசி, மகளிர் பாசறைத் தலைவர் த.மரகதமணி, இளைஞரணித் தலைவர் வ.கலைச்செல்வன், கும்மிடிப்பூண்டி மாவட்ட கழகத் துணைச் செயலாளர் க.ச.க.இரணியன், அரும்பாக்கம் சா.தாமோதரன், கொடுங்கையூர் கழக தலைவர் கோ.தங்கமணி, செம்பியம் கழக தலைவர் ப.கோபாலகிருஷ்ணன், எருக்கமாநகர் கழக அமைப்பாளர் சொ.அன்பு, மாதவரம் கழக அமைப்பாளர் சி.வாசு, கண்ணதாசன் நகர் கழக அமைப்பாளர் கு.ஜீவா, சி.காமராஜ், வ.கலைச்செல்வன், அ.செந்தமிழ்தாசன், ஓட்டுநர் அசோக், க.கலைமணி, ஜெ.ஆனந்த், கே.என்.மகேசுவரன் மற்றும் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

மறைவுற்ற அம்மையாரின் இறுதி நிகழ்வுகள் வில்லிவாக்கம் இடுகாட்டில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *