புதுடில்லி, ஆக.30 நேபாள வெள்ளத்தின்போது அங்கிருந்தது 103 தமிழர்கள் என்று இதுவரை தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், வெள்ளப்பெருக்கின்போது 400 தமிழர்கள் இருந்ததாக தமிழ்நாடு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
400 பேரில், 21 மட்டுமே தற்போது சென்னை திரும்பியிருக்கிறார்கள். தேசமங்கையர்கரசி உள்பட 148 பேர் காத்மாண்டுவில் பத்திரமாக இருக்கிறார்கள். இவர்கள் விரைவில் சென்னை திரும்புவார்கள். ஆனால் சுமார் 90 பேர் நிலைமை என்னவானது என்பது குறித்த தகவல்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், நேபாளத்தில் இருந்த தமிழர்களின் எண்ணிக்கை தற்போது 400 என்று தெரிய வந்திருப்பதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம், சென்னை ஏஜென்ஸிகள் மூலம் 27.8.2026 அன்று வரை 103 பேர் நேபாளம் சென்றதாக மட்டுமே அறியப்பட்டிருந்தது. இதில், கும்பகோணம் ஏஜென்ஸி மூலம் சென்ற 21 மட்டுமே உயிருடன் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்து அவர்கள் பத்திரமாக சென்னை வந்து சேர்ந்தனர்.
நேபாளத்தில் நடக்கும் மீட்புப் பணிகளை ஆய்வு செய்ய டில்லி சென்றிருக்கும் தமிழ்நாடு அமைச்சர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள ராஜ்மோகன், நேபாளத்தில், இதுவரை தகவல் தெரியாமல் இருக்கும் தமிழர்களின் நிலையை கண்டறிவது மிகப்பெரிய சவாலாக உள்ளதாகக் கூறியிருக்கிறார்.
தற்போது வரை 400 பேர் நேபாளம் சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 140 பேர் பத்திரமாக உள்ளனர். 21 பேர் ஊர் திரும்பி விட்டார்கள். 90 பேரின் நிலைமை என்னவானது என்று தெரியவில்லை. அவர்களை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. வெள்ளத்தால், நேபாளத்தில் தொலைத்தொடர்பும் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலைமை சீரடைந்து வருவதால் விரைவில் மற்றவர்கள் தகவல்களும் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
