பாவம் போக்கும் புண்ணிய நதிகளா?’ நோய்களைப் பரப்பும் கிருமிகளின் அடைக்கலாமா?

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

லக்னோ, ஆக.29 உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் பெருக்கெடுத்து ஓடிய ‘புனித’ நதிகள் எனப்படும் கங்கை மற்றும் யமுனை யின் நீர்மட்டம் தற்போது குறையத் தொடங்கியுள்ள நிலையில், ஆற்று நீரில் ஆபத்தான கிருமிகள் அதிகரித்துள்ள தால் பொதுமக்கள் யாரும் அந்நீரைப் பயன்படுத்த வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாவட்ட ஆட்சித் தலைவர் மணிஷ்குமார்

இது குறித்து அலகாபாத் (பிரயாக்ராஜ்) மாவட்ட ஆட்சித் தலைவர் மணிஷ் குமார் வர்மா தெரிவித்துள்ளதாவது:

‘‘சங்கமப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ள நீர் படிப்படியாக வடியத் தொடங்கியுள்ளது. கங்கை நதியின் நீர்மட்டம் குறைந்து வருவதைத் தொடர்ந்து, வெள்ளத்தில் மூழ்கியிருந்த சாலைகளில் போர்க்கால அடிப்படையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளையில், நீர்மட்டம் குறைந்ததால் நீரோட்டத்தில் கழிவுகளும் கிருமிகளும் பல்கிப் பெருகத் தொடங்கி விட்டன. இதனால் நிலத்தடி நீரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. நிலைமையை நிர்வாகம் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட கிராமங்களில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் சுகாதாரத் துறையின் கூட்டுக் குழுக்கள் மூலம் தூய்மைப் பணிகளும், கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மருத்துவக் குழுக்கள்!

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாக மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டு, சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதனைகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வரு கின்றன.

தண்டோரா மூலம்
மக்களுக்கு விழிப்புணர்வு!

பாவங்களைப் போக்கும் ‘புனித’ நதிகளாகக் கருதப்படும் கங்கையிலும் யமுனையிலும் பாக்டீரியா மற்றும் கிருமிகளின் தாக்கம் அதிகரித்துள்ளதால், முன்னெச்சரிக்கையாக ஆற்றின் நீரைப் பயன்படுத்த வேண்டாம் எனத் தண்டோரா மூலம் மக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *