பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் பி.எம். கிசான் திட்டத்தில் ரூ.60 கோடி மோசடி கண்டுபிடிப்பு

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

லக்னோ, ஆக.29 உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் விவசாயிகள் பயனடைவதற்காக ஒன்றிய அர சாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் (தகுதியான விவ சாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டம்) ரூபாய் 60 கோடிக்கும் அதிகமான அளவில் மோசடி நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

காவல்துறையில் புகார்!

இதையடுத்து துறை ரீதியான விசாரணையை மேற்கொள்ளு மாறு வேளாண்மை துறை இயக்குநர் அஷ்வினி குமார் சிங் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இந்தியாவில் ஒன்றிய அரசால் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் மூலம் தகுதியுள்ள விவசாய நிலம் வைத்திருக்கும் விவ சாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தத் தொகையானது நேரடி பணப் பறிமாற்றம் மூலம் விவசாயிகளின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு களில் நேரடியாக வரவு வைக்கப்படு கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பலன்களை பெற விரும்பும் விவ சாயிகள், தங்களது கைப்பேசிகள் மூலமாகவோ அல்லது ஜன் சேவா கேந்திரங்கள் வழியாகவோ பதிவு செய்ய வேண்டும்.

இதையடுத்து விண்ணப்பங்கள் முதலில் தாலுகா அளவில் பரி சீலிக்கப்பட்டு, பின்னர் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்படு கின்றன. மாவட்ட, மாநில மற்றும் ஒன்றிய அளவில் சரிபார்க்கப்பட்ட பிறகு, தகுதியுள்ள பயனாளிகள் இந்தத் திட்டத்தின் கீழ் நிதி உத வியை பெறுகிறார்கள்.

இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள குண்டா தாலு காவில் வழக்கமான செயல்முறை யின் மூலம் பதிவு செய்ய முடியாத விவசாயிகள் பலன்பெறும் வகை யில், தாலுகா அளவில் நேரடி நுழைவு வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

பெருமளவிலான சந்தேகத்திற்கிடமான பதிவுகள்!

இந்தத் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள், வழக்கமான சரிபார்ப்பு வழிமுறையை தவிர்த்து, நேரடியாக ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதன் பதிவுகளை ஆய்வு செய்தபோது, குண்டா தாலுகாவில் பெருமளவிலான சந்தேகத்திற்கிடமான பதிவுகள் இடம்பெற்றிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

துறைசார் விசாரணை

மேலும் இந்த வழிமுறை வழி யாகப் பதிவு செய்திருந்த பல பயனாளிகள், சிறார்கள் எனவும் மாவட்டத்திற்கு வெளியேயும், மாநிலத்திற்கு வெளியேயும் வசிப்பவர்கள் எனவும் தெரியவந்தது. இந்த முறைகேடுகளைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துறைசார் விசாரணையில், நேரடி பதிவு வசதியை பயன்படுத்தி 3,18,846 பதிவுகள் இடம்பெற்றிருந்தது தெரியவந்தது.

இந்தப் பதிவுகள் தொடர்பாக கூறப்படும் மோசடி பணப்பட்டுவாடா மதிப்பு ரூ.60 கோடியை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இணையத்தில் இருந்து நேரடி நுழைவு வசதி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் புகாரை அடுத்து வேளாண்மை துறை துணை இயக்குநர் அஷ்வினி குமார் சிங் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து 1700 அய்பி முகவரிகள் மற்றும் போலி பயனாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளதாக காவல் கண்காணிப்பாளர் தீபக் பூக்கர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *