காத்மாண்டு, ஆக. 29– நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர வெள்ள பாதிப்பை தொடர்ந்து, மீட்பு, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக நேபாள ரூபாய் 25 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,500 கோடி) அவசர நிதியுதவி வழங்க உலக வங்கி முன்வந்துத்துள்ளது.
இந்த நிதி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும். இந்தியா உடனடியாக மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்களை நேபாள அரசுக்கு அனுப்பியுள்ளது. சீனாவும் உடனடியாக நிதியுதவி வழங்கஉறுதி அளித்துள்ளதாக நேபாள நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
