உ.பி. : ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 40 ஆயிரம் சமாஜ் வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் அறிவிப்பு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஆக. 27- உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்தில் தேர்தல் நடக்க உள்ளது. அங்கு தேர்தல்களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்று சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ‘சிறீ சம்மான் சம்ருத்தி யோஜனா’ (பெண்களுக்கான கண்ணியம் மற்றும் செழிப்புத் திட்டம்) என்கிற திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதன் கீழ் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 வழங்கப்படும் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது. மேலும் 12-ஆம் வகுப்பு முடித்த பெண்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கூறும்போது, ‘‘சிறீ சம்மான் சம்ருத்தி யோஜனா என்பது, மக்கள் தொகையில் 50% பங்கு வகிக்கும் பெண்களுக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குவதற்கான ஓர் உறுதிமொழி. இந்த தொகை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்படும்” என்றார்.

உத்தரப் பிரதேசத்தில் 60 வயது பெண்கள் அரசுப் பேருந்துகளில் முற்றிலும் இலவசமாக பயணம் செய்யும் ’லோக் மாதா அஹில்யாபாய் மத்ரிசக்தி யாத்ரா’ என்கிற திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் நேற்று (26.8.2026) தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் அன்றாடம் 84,438 பெண்கள் பயனடைவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இத்துடன் இன்று தொடங்கும் ‘ரக்‌ஷா பந்தன்’ பண்டிகைக்காக ஆகஸ்ட் 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் அனைத்து பெண்களும் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பெண்களுடன் ஆண் ஒருவரும் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *