புதுடில்லி, மே 21 இந்தியாவில் 98,592 அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பறைகள் இல்லை எனவும் 61,540 பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் பயன்படுத்தக்கூடிய வகையில் இல்லை எனவும் நிதி ஆயோக் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் பள்ளிக் கல்வி முறை குறித்து நிதி ஆயோக் ஒரு புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கை அரசுப் பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்த தீவிரப் பிரச்சினைகளையும், நாட்டின் கல்வி முறை யில் உள்ள பெரிய குறைபாடுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 14.71 லட்சம் பள்ளிகள் உள்ளன.
இதில் ஒரு லட்சம் அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பறை இல்லை. மேலும், 61 ஆயிரம் பள்ளிகளில் கழிப்பறைகள் இருந்தாலும், அவை பயன்படுத்த இயலாத வையாக உள்ளன.
அவற்றில் 24.69 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பள்ளிகளில் மின்சார வசதி மேம்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும் அது இன்னும் சீரற்றதாகவே உள்ளது.
2024–2025 ஆம் ஆண்டிற்கான கல்விக்கான ‘ஒருங்கி ணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு பிளஸ்’ தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள சுமார் 1.19 லட்சம் பள்ளி களில் இன்னும் முறையான மின் இணைப்பு வசதி இல்லை.
இது செயற்கை நுண்ணறிவு காலத்தில் மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்துவதற்கு முட்டுக்கட்டையாக இருந்து அவர்களது கற்றல் சூழலை மேலும் கடினமாக்குகிறது.
கை கழுவும் வசதியில்லா பள்ளிகள் 59,829 மேலும், சுமார் 14,505 பள்ளிகளில் இன்னும் குடிப்பதற்கு தகுதியான தரத்துடன் கூடிய குடிநீர் வசதிகள் செய்துதரப்படவில்லை.
மிக மோசமான சூழல் என்னவென்றால் கிட்டத்தட்ட 59,829 பள்ளிகளில் கைகளைக் கழுவுவ தற்கான வசதிகள் கூட இல்லை.
இது மாணவர்களின் ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் நேரடியாகப் பாதிக்கிறது.
தொலைதூர மற்றும் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதி களில் உள்ள பல பள்ளிகளில், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பல வகுப்புகளைக் கவனிப்பதோடு, நிர்வாகப் பொறுப்புகளையும் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒரு லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் கல்விக்கான ‘ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு பிளஸ்’ தரவுகளின்படி, இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்டு மட்டுமே இயங்கி வருகின்றன.
இது நாட்டின் ஒட்டுமொத்த பள்ளிகளில் 7% க்கும் அதிகமாகும். இதனால் வெவ்வேறு வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே அறையில் அமரவைக்கப்பட்டு ஒன்றாகப் பாடம் கற்கும் நிலை ஏற்படுகிறது.
இது மாணவர்களுக்கான தனிப்பட்ட கவனத்தைக் குறைப்பதுடன், கல்வியின் தரத்தையும் பாதிக்கிறது. மாணவர்களே இல்லா 8 ஆயிரம் பள்ளிகள் நாடு முழுவதும் சுமார் 7,993 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை எனப் பதிவாகியுள்ளது.
இதில் அதிகபட்சமாக மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் முன்னி லையில் உள்ளன.
ஒரு மாணவர் கூட இல்லாத போதிலும், பழைய ஆவணங்களின் அடிப்படையில் இந்தப் பள்ளிகளுக்குத் தொடர்ந்து நிதி ஒதுக்கப்படுகிறது.
ஆசிரியர் நியமனங்களும் நடைபெற்று வருகின்றது. கள எதார்த்தத்திற்கும், கல்வித் திட்டமிடலுக்கும் இடையே உள்ள இடைவெளியை இப்பிரச்சனைகள் காட்டு கின்றன.
பாதியில் வெளியேறுதல் 11.5 சதவீதம் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது பள்ளிகளில் இருந்து பாதியிலேயே நின்று விடும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கூறப் படுகிறது.
எனினும் மேல்நிலைக் கல்வி அளவில் 11.5 சதவிகித மாணவர்கள் கல்வியைப் பாதியிலேயே கைவிடும் சூழல் நிலவி வருகிறது. அதே நேரத்தில் கடந்த 2005 இல் அரசுப் பள்ளிகளில் 71 சதவிகிதமாக இருந்த மாணவர் சேர்க்கை 2024–2025 இல் 49.24 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. பொதுக் கல்வி முறையை அரசு முறை யாக பராமரிக்காததன் வெளிப் பாட்டின் காரணமாக பெற்றோர்களி டையே வளர்ந்து வரும் அதிருப்தியை இது பிரதிபலிக்கிறது என கூறப்படுகிறது.
92 ஆயிரம் பள்ளிகள் குறைவு கடந்த 2017–2018 ஆம் ஆண்டில் 15.58 லட்சமாக இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை, 2024–2025 ஆம் ஆண்டில் 14.71 லட்சமாகக் குறைந்துள்ளது. அதாவது 92,000 பள்ளி கள் குறைந்துள்ளன. ‘சமக்ர சிக்ஷா’ (Samagra Shiksha) போன்ற ஒன்றிய அரசின் திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப் பட்ட பள்ளிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் சீரமைப்பு (Consolidation and rationalisation) நடவடிக்கைகளே இந்த எண்ணிக்கைக் குறைவிற்குக் காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.c
