கபிஸ்தலம், ஆக.27- பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழக அவசர கலந்துரையாடல் கூட்டம் கபிஸ்தலம் மணி மெட்ரிக் பள்ளி பழைய கட்டட வளாகத்தில் 26-08-2026 புதன் மாலை 6:00 மணி அளவில் நடைபெற்றது.
பாபநாசம் ஒன்றிய தலைவர் தங்க.பூவானந்தம் கூட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றினார்.
பாபநாசம் ஒன்றியச் செயலாளர் சு.கலியமூர்த்தி அனைவரையும் வரவேற்று கடந்த காலச் செயல்பாடுகள் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்ட ஏற்பாடுகள் திட்டமிடல் குறித்து உரையாற்றினார்.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உழைப்பு அளப்பரிய சாதனைகள் கழகத்தின் தொடர்ச்சியான செயல்பாடுகள் குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தை பாபநாசத்தில் மிக எழுச்சியுடன் நடத்துவது குறித்து நோக்க உரையாற்றினார்.

மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் கோவி.பெரியார் கண்ணன், அய்யம்பேட்டை நகரத் தலைவர் வெ.இராவணன், அய்யம்பேட்டை நகரச் செயலாளர் வை.அறிவழகன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் லெனின் பாஸ்கர், ஒன்றிய இளைஞரணி தலைவர் பெ.முத்துராஜா, ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோவி ராஜீவ்காந்தி, மணி மெட்ரிக் பள்ளி நிர்வாகி குணசேகரன், மணி மெட்ரிக் பள்ளி முதல்வர் பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் முருகானந்தம், பகுத்தறிவாளர்கழகப் பொறுப்பாளர் இளவரசன், பட்டுக்கோட்டை அழகிரி பள்ளியின் தலைமை அறங்காவலர் சா.வரதராஜன், ஒன்றிய துணைத் தலைவர் க.ஜனார்த்தனன், பாபநாசம் நகர தலைவர் வெ, இளங்கோவன், மாவட்ட துணைச் செயலாளர் துரை.சரவணன், வலங்கைமான் ஒன்றியத் தலைவர் பவானி சங்கர், பகுத்தறிவாளர்கழக மாவட்ட அமைப்பாளர் க.திருஞானசம்பந்தம் மாவட்டச் செயலாளர் சு.துரைராசு, மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, பகுத்தறிவாளர் கழக மாநிலபொதுச் செயலாளர் வி.மோகன், ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
இரங்கல் தீர்மானம்
அய்யம்பேட்டை நகர இளைஞரணிச் செயலாளராக சிறப்பாக பணியாற்றிய கோபிநாதன் அவர்கள் மறைவிற்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது
2026 செப்டம்பர் 9 பாபநாசத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் தந்தை பெரியார் 148ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை மிக எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தை பாபநாசத்தில் நடத்துவதற்கு தேதி வழங்கி வாய்ப்பு அளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஒன்றிய திராவிடர் கழகம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது
அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டுபிறந்தநாள் விழாவை செப்டம்பர் 17 அன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இருசக்கர ஊர்திகளில் கிளைகள் தோறும் சென்று கழகக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி எழுச்சியுடன் கொண்டாடுவது என முடிவு செய்யப்படுகிறது
கும்பகோணம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் செப்டம்பர் அன்று நடைபெறும் பெரியார் பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் பாபநாசம் ஒன்றிய பகுதிகளிலிருந்து பெருவாரியான மாணவர்களை பங்கேற்கச் செய்வது என முடிவு
செப்டம்பர் 9 பாபநாசத்தில்தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்ட ஏற்பாட்டுக் குழு
ஒருங்கிணைப்பாளர்கள்
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
வி.மோகன் (பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர்)
கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்)
சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்)
ஏற்பாட்டுக்குழு தலைவர்: தங்க.பூவானந்தம் (பாபநாசம் ஒன்றியத் தலைவர்)
செயலாளர்: சு.கலியமூர்த்தி (பாபநாசம் ஒன்றியச் செயலாளர்)
பொருளாளர்: க.திருஞானசம்பந்தம் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்)
துணைத் தலைவர்கள்:
வெ.இளங்கோவன் (பாபநாசம் நகரத் தலைவர்), க.ஜனார்த்தனன் (பாபநாசம் ஒன்றிய துணைத் தலைவர்)
துணைச் செயலாளர்கள்:
மு.வீரமணி (பாபநாசம் நகரச் செயலாளர்). மு.சேகர் (ஒன்றிய ப.க தலைவர்)
பாபநாசம் ஒன்றிய கழகத் தோழர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் உறுப்பினர்களாக இருந்து செயல் படுவார்கள்.
