மதுக்கூரில் கழகத்தின் சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா

1 Min Read

மதுக்கூர், ஜூன் 14- முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்த நாள் விழா ஆங் காங்கே கொண்டாடப்பட்டு வந்தது. மேலும் பொதுக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் பேருந்து நிலை யத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் திராவிடத்தின் எழுச்சி ஆரியத்தின் வீழ்ச்சி தமிழகத்தின் மீட்சி பரப்புரைக் கூட்டம் 11.6.2026 அன்று மாலை மதுக்கூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக புரவலர் என்.கே.ஆர்.நாராயணன் தலைமை ஏற்றார். ஒன்றிய கழகத் தலைவர் புலவஞ்சி அண்ணாதுரை அனைவரையும் வரவேற்றார். இதற்கு மாவட்ட காப்பாளர் அத்திவெட்டி வீரையன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் புலவஞ்சி காமராசு, பொதுக்குழு உறுப்பினர் முத்து.துரைராசன், ஒன்றிய கழகச் செயலாளர் ஆடல் அரசு, மாவட்ட கழகத் துணைச் தலைவர் கு.சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனை அடுத்து மாநில கிரா மப்புற பிரச்சார குழு அமைப்பாளர் அதிரடி க.அன்பழகன், கழக பேச்சாளர் ராஜவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் மாவட்ட திமுக பொறுப்பாளர் தி.பழனிவேல், சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் கா. அண்ணாதுரை, வடக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், மதுக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், தெற்கு ஒன்றிய செயலாளர் மெய்ய நாதன், மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் எஸ்.என்.எஸ்.ஹாஜாமுகைதீன், மதுக்கூர் திமுக பேரூர் கழகச் செயலாளர் ராஜகோபாலன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
இதனை அடுத்து கலைஞரின் உருவப்படத்திற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தி.பழனிவேல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இறுதியாக நகர கழகச் செயலாளர் பாலா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய நகர திராவிடர் கழகத்தினர் செய்திருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *