1957இல் அனுப்பிய ஸ்புட்னிக்கில் ஆரம்பித்து இப்போது சிறிய நாடுகள் முதற்கொண்டு தனக்கென தனி செயற்கைக்கோள் வைத்திருக்கின்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. சமீபமாக ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துகின்றன.
செயலிழந்த செயற்கைக்கோள்களால் விண்வெளியில் மிக அதிக அளவில் குப்பை(Space Debris) உருவாகி வருகிறது. விண்வெளி பரந்த இடம், அதில் இட நெருக்கடி உருவாகாது என்றாலும் இப்போது இது ஆபத்தாகும் என்று அஞ்சப்படுகிறது.
செயற்கைக் கோள் செயலிழந்தாலும் அது புவியின் வளிமண்டலத்தில் நுழைகையில் எரிந்து சாம்பாலாகி விடும். ஆனால் செயலிழந்த செயற்கைக்கோள்கள் சில நேரங்களில் சிதையாமல் அப்படியே விழுந்த நிகழ்வுகளும் உண்டு.
ஒரு புதிய ஆய்வு செயற்கைக்கோள் பெருந்திரள் அதிக பாதுகாப்பற்றதாக மாறி வருவதாக தெரிவிக்கிறது. கடந்த அய்ந்தாண்டுகளில் 12000 க்கு மேல் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் பெருந்திரளாக பெரிய விளைவுகளை உருவாக்க வாய்ப்பிருப்பதாக இந்தாய்வு தெரிவிக்கிறது.
