புதிய வகை ‘எச் 1 என் 1’ காய்ச்சல் வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை! அச்சப்படத் தேவையில்லை – அய்சிஎம்ஆர் விளக்கம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஆக.24- நாட்டில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் புதிய வகை எச்1என்1 காய்ச்சல் வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (அய்சிஎம்ஆர்) தெளிவுபடுத்தியுள்ளது.

தற்போது பரவி வரும் பருவகால இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வகைகள், புவியின் வடஅரைகோளத்தில் பருவ காலங்களில் வழக்கமாக பரவும் வகைகளாகும். இவை, தற்போதைய பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி வகை களுக்கு கட்டுப்படக் கூடியவையே. இந்த வைரஸ்கள் 2025-ஆம் ஆண்டு முதலே புழக்கத்தில் உள்ளன அய்சிஎம்ஆர்-இன் மூத்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள அறிக் கையின்படி, எச்1என்1 உள்ளிட்ட பருவகால இன்ஃப்ளூயன்ஸா பாதிப் புகள் பெரும்பாலும் தானாகவே குண மாகக்கூடியவை. காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும் உடல் வலி ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும்; முறையான பராமரிப்பு மற்றும் ஓய்வு மூலம் பெரும்பாலானோர் குணமடை கின்றனர். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே ஏதேனும் உடல்நலப் பாதிப்புகள் உள்ளவர்களுக்குச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கலாம். அறிகுறிகள் நீடித்தாலோ, மோசமடைந்தாலோ அல்லது தீவிர மடைந்தாலோ, உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

பருவகால காய்ச்சல் ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவுதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது, கைக்குட்டை கட்டாயம் கொடுத்து அனுப்ப வேண்டும். இருமும் போதும், தும்மும்போதும் கைக்குட்டையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும்.

மேலும் பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், கழிவறைக்குச் சென்று வந்தபிறகும், விளையாடச் சென்று திரும்பி வரும்போது என நாள் ஒன்றுக்கு சுமார் 10 முறை கைகளை கழுவி சுத்தப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு மட்டுமல்ல. அனைத்து பொதுமக்களுக்கும் கை கழுவுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

கள நிலவரம் தொடர் கண்காணிப்பு மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தேவையான பொது சுகாதார நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் அய்சிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *