“நீட்” தேர்வையும், உயர் ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும்
முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி
திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில்
மன்னார்குடி, ஆக. 23- மன்னார்குடி முதல் பட்டுக்கோட்டை வரை நான்கு நாள்கள் பயணிக்கும் 5 ஆம் குழுவை மன்னார்குடி பெரியார் சிலை அருகில் மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.
22.08.2026 அன்று காலை 10.00 மணியளவில் மன்னார்குடி தந்தை பெரியார் சிலை அருகில். நீட் தேர்வையும், உயர் ஜாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரை பயணத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டனர்.
கழகத் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, சிறப்புரையாற்றினார். தொடக்க விழா நிகழ்வுக்கு மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், தலைமை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, பயணத்தை ஒருங்கிணைத்து நடத்தினார்.
மாநில இளைஞரணி துணைச் செயலா ளர் அ. ஜெ.உமாநாத் பயணக் குழுவிற்கு தலைமை ஏற்றார். மாநில இளைஞரணி துனைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார் முன்னிலை ஏற்றார். மாவட்ட இளைஞரணி தலைவர் வீரத்தமிழன் வரவேற்றார்.
மன்னை ப.க.தலைவர் சி.ரமேஷ், நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.
உடன் குடந்தை மாவட்ட காப்பாளர் வை.இளங்கோவன், தஞ்சை மாவட்ட செயலாளர் அருணகிரி, மன்னை மாவட்ட பொதுக் குழு உறுப்பினர் கோ.கணேசன், மன்னை மாவட்ட துணைத் தலைவர் ந.இன்பக்கடல், ஒன்றிய தலைவர் மு.தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர் த.செல்வராஜ், கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் புட்பநாதன், தஞ்சை புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர் துரை, விடுதலை வாசகர் வட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட ப.க தலைவர் வை.கவுதமன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வாஞ்சியூர் இளங்கோவன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் எம்.பி.குமார்,கோட்டூர் ப.க. செ.இராமலிங்கம், மாவட்ட ப.க அமைப்பாளர் கோபால், நகர ப.க தலைவர் கோவி.அழகிரி, ப.க அமைப்பாளர் அறிவானந்தம், நகர இளைஞரணி தலைவர் மணிகண்டன், ப.க துணைத் தலைவர் முரளிதரன், நகர இளைஞரணி அமைப்பாளர் இந்திரஜித், தி.க சிவா வணங்காமுடி, மன்னை நகர செயலாளர் வே.அழகேசன், மன்னை நகர தலைவர் உத்திராபதி, மன்னை ஒன்றிய துணைத் தலைவர் கவிஞர் கோ.செல்வம், பேராசிரியர் காமராஜ், திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் ப.நாகராஜன், நகர துணைச் செயலாளர் ப. சம்பத்குமார், மன்னை சித்து, திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன், ஆட்டோ மதிரவி, வாஞ்சியூர் இளங்கோவன். கரெத்தினவேல், கைலை ஊமைதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ச்சியாக பயணத்தில் பயணிப்பவர்கள்: சொற்பொழிவாளர் சே.மெ.மதிவதனி, துணை பொதுச் செயலாளர், பயண ஒருங்கிணைப்பாளர் நாத்திக.பொன்முடி, தலைமை, மாநில இளைஞரணி துணைச் செயலாளர். அ.ஜெ.உமாநாத், மற்றும் திருவாரூர் மாவட்ட செயலாளர் கோ.பிளாட்டோ, காரைக்கால் மாவட்ட செயலாளர் பொன். பன்னீர்செல்வம், திருவாரூர் மாவட்ட மாணவர் கழக தலைவர் வே.அறிவழகன். திருவாரூர் மாவட்ட மாணவர் கழக செயலாளர் அ. அறிவுச்சுடர். திருவாரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.இரவிக்குமார், பட்டுக்கோட்டை மாவட்டத் துணைத் தலைவர் சோம. நீலகண்டன். பட்டுக்கோட்டை நகர தலைவர் அரவிந்த். காரைக்கால் மாவட்ட இளைஞரணி தலைவர் லூயிஸ் பியர், மன்னை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் சாருகாண், நாகை நகர செயலாளர் சண். ரவிக்குமார், நாகை மாணவர் கழக நாகை சா.அறிவாளன், திருவாரூர் தமிழ் இனியன், ரித்திக்ராம், மன்னார்குடி பாலாஜி, சந்தோஷ், ஓட்டுநர் ராஜி ஆகியோர் பயணத்தில் முழுமையாக பயணித்ததனர்.
13 இருசக்கர வாகனங்கள்
பிரச்சாரத்தில் துண்டறிக்கை வழங்குதல். நூல் விற்பனை, பொது மக்களிடம் உண்டியல் ஏந்தி கையெழுத்து வாங்குதல், போன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
புத்தக விற்பனை ரூ 1025 மட்டும். (மன்னை தொடக்க நிகழ்வில் மட்டும்)

நீட் தேர்வு, உயர் ஜாதியினருக்கான (EWS) இட ஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் திருப்பூரிலிருந்து துவங்கி அவினாசி, அன்னூர், மேட்டுப்பாளையம், காரமடை வரை நடைபெற்றது.

மூன்றாம் குழுவின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பிரச்சாரத்தில் காரமடையில் மேட்டுப்பாளையம் மாவட்ட மேனாள் தலைவர் பாசமலர் ஆறுமுகம் தலைமையில், சு.முருகேசன் முன்னிலை வகித்தார். நகராட்சி கவுன்சிலர் கவிதா நடராஜ், திமுக நகரச் செயலாளர் குரு பிரசாத், திமுக பேச்சாளர் ரங்கராஜ், மீனவர் அணியின் மாவட்ட செயலாளர் ராம் குட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

‘நீட்’ – EWS எதிர்ப்பு இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் – 2 ஆம் குழு – முதல் நாள் (22.08.2026)
