
‘நீட்’ தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும்
முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி
திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறையினரின்
மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரை முதல் குழுப் பயணத்தை
திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடங்கி வைத்தார்
சென்னை, ஆக.22 – ‘நீட்’ தேர்வையும், உயர்ஜாதியினருக் கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் இன்று 22.8.2026 முதல் 25.8.2026 வரை நான்கு நாட்கள் நடைபெறும் மாபெரும் இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணத்தின் சென்னை முதல் தாம்பரம் வரையிலான முதல் குழுப் பயணத்தை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் இன்று (22.8.2026) காலை 9 மணியளவில் சென்னை பெரியார் திடலில் தொடங்கி வைத்தார்.
‘நீட்’ தேர்வையும், உயர் ஜாதியினருக்கான EWS இடஒதுக் கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் 22.8.2026 முதல் 25.8.2026 வரை நான்கு நாள்கள் நடைபெறும என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்.
அதன்படி முதல் குழு சென்னை முதல் தாம்பரம் வரை திராவிட மாணவர் கழக விளையாட்டு அணிச் செயலாளர் ம.பூவரசன் தலைமையிலும், இரண்டாம் குழு திருவண்ணாமலை முதல் ஆத்தூர் வரை திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் ச.மணிமொழி தலைமையிலும்,
மூன்றாம் குழு – திருப்பூர் முதல் கோபிச்செட்டிபாளையம் வரை திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் த.சிவபாரதி தலைமையிலும், நான்காம் குழு திண்டிவனம் முதல் புதுச்சேரி வரை திராவிட மாணவர் கழக துணைச் செயலா ளர் ஆ.அறிவுச்சுடர் தலைமையிலும்,
அய்ந்தாம் குழு – மன்னார்குடி முதல் பட்டுக்கோட்டை வரை மாநில இளைஞரணி இணைச் செயலாளர் அ.ஜெ.உமாநாத் தலைமையிலும், ஆறாம் குழு மதுரை திருமங்கலம் முதல் தென்காசி வரை திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் சீ.தேவராஜ்பாண்டியன் தலைமையிலும் நடைபெறுகிறது.
சென்னையில்…

சென்னை பெரியார் திடலில் இன்று (22.8.2026) காலை 9 மணியளவில் முதல் குழுவினரின் சென்னை முதல் தாம்பரம் வரையிலான மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்தைத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடங்கி வைத்தார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் கொடியசைத்து வழியனுப்பினார்.
இந்த முதல் குழுவிற்கு திராவிட மாணவர் கழக விளையாட்டு அணிச் செயலாளர் ம.பூவரசன் தலைமையேற்றார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.அருண்குமார் முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி இணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இப்பரப்புரைப் பயணச் சொற்பொழிவாளராக செயல்பட்டார்.
முன்னதாக இப்பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கி வைத்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கும், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன் ஆகியோருக்கும் பயனாடை அணிவிக்கப்பட்டது.
அதேபோன்று திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், திராவிட மாணவர் கழக விளையாட்டு அணிச் செயலாளர் ம.பூவரசன் ஆகியோருக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்தார். பிரச்சாரப் பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் பிரச்சார குழுவின் உண்டியலில் நன்கொடைகளை வழங்கி உற்சாகப்படுத்தினர்.
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில் மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன் பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், தாம்பரம் மாட்ட தலைவர் ப.முத்தையன், அரும்பாக்கம் சா.தாமோதரன், பி.சி.ஜெயராமன், ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன், ந.தமிழினியன், புலவர் சங்கரலிங்கம், வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், மாவட்டக் காப்பாளர் கி.இராமலிங்கம், வழக்குரைஞர் துரை.அருண், பெரியர் மாணாக்கன், எம்.ஆர்.மாணிக்கம், கோ.தங்கமணி, சி.வெற்றிச்செல்வி, தங்க.தனலட்சுமி, இசையின்பன், யாழ்தீலிபன், பெரு.இளங்கோ, வை.கலையரசன், க.கலைமணி மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்று வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
