சிவகங்கை மற்றும் காரைக்குடி மாவட்ட சுயமரியாதைச் சுடரொளிகள் படங்கள் அடங்கிய பதாகையினை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பார்வையிட்டார்.

சிவகங்கை மாவட்டத் தலைவர் ச.அனந்தவேல் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். உடன் சிவகங்கை மாவட்ட காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன், காரைக்குடி மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் ஆ.முத்துராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் இர.புகழேந்தி, சிவகங்கை மாவட்ட செயலாளர் பெரு.ராசாராம், காரைக்குடி மாவட்ட தலைவர் கு.வைகறை, மாவட்ட செயலாளர் சி.செல்வமணி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் உள்ளனர். காரைக்குடி மாவட்ட துணைத் தலைவர் தேவகோட்டை மணிவண்ணன், ஒன்றிய செயலாளர் வாரியர் வயல் ஜோசப் ஆகியோர் பயனாடை அணிவித்தனர்.

சிவகங்கையில் தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோர் ஊர்வலமாக வந்த போது ஸநாதனிகள் செருப்புத் தோரணம் கட்டி அவமதித்த அதே இடத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை சிவகங்கை மாவட்டத் தலைவர் ச.அனந்தவேல், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆ.முத்துராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமேகலை, சுப்பையா, இர.புகழேந்தி, தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
