கன்னியாகுமரி ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அகஸ்தீஸ்வரம், ஆக. 19- கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம் 16. 8.2026 ஞாயிறு மாலை 6 மணிக்கு கன்னியாகுமரியை அடுத்த மந்தாரம்புதூரில் வைத்து மாவட்டக் கழக;த தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டக் கழக;ச செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்க உரையாற்றினார். திராவிடர் கழக மகளிர் பாசறை மாவட்ட தலைவர் மஞ்சு குமாரதாஸ் வரவேற்பு உரையாற்றினார்.

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்உரத்தநாடு இரா. குணசேகரன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட காப்பாளர் ம. தயாளன், துணைத் தலைவர் ச. நல்லபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் மா. மணி, மாவட்ட மகளிர் அணித தலைவர் சு.இந்திரா மணி, தொழிலாளர் அணி செயலாளர் க.யுவான்ஸ், கோட்டாறு பகுதி கழகத் தலைவர் ச.ச.மணிமேகலை, திராவிடர் கழக தோழர்கள் ஞா.பிரான்சிஸ், அரும்பாக்கம் தாமோதரன், மந்தாரம் புதூர் பொன்முடி, திராவிடர் கழக மாணவர் கழகப் பொறுப்பாளர் இனியன் உட்பட பலர் பங்கேற்றனர்

மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் எஸ். அலெக்சாண்டர் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 148 ஆவது பிறந்தநாள் எழுச்சியுடன் கொண்டாடுவது எனவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

திராவிடர் கழக கருத்துக்களை மக்களுடன் கொண்டு சேர்க்கும் வகையில் பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள், விழிப் புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *