நீட் தேர்வு மோசடியின் விளைவு 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நீக்கம்

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக. 18– தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் தேர்வு களில் நடைபெறும் தொடர் முறைகேடு குறித்து ஒன்றிய உயர் கல்வித்துறை அமைச்சகம் நேற்று (17.8.2026) விளக்க மளித்துள்ளது.

கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் மறுதேர்வு நடத் தப்பட்டது.

என்டிஏ நடத்திய இந்தத் தேர்வில் நடை பெற்ற முறைகேடுகளைக் கண்டித்தும், என்டிஏவை கலைக்கக் கோரியும் பல்வேறு தரப்பில் எதிர்ப் புகள் கிளம்பின.

இதைத் தொடர்ந்து, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12 ஆம் வகுப்பு விடைத்தாள்களைக் கணினி மூலம் திருத்தும் டிஜிட்டல் மதிப்பீட்டு முறையில் முறைகேடுகள் நடைபெற்றது.

இதையடுத்து, 87 பாடங்களுக்கான 2026 யுஜிசி நெட் தேர்வு ஜூன் 22 முதல் ஜூன் 30 வரை நடைபெற்றது. இதில், 84 பாடங்களுக்கான தற்காலிக விடைக்குறிப்புகளை என்டிஏ நேற்று வெளி யிட்டது.

ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான வினாத்தாள்களில் பல்வேறு பிழைகள் இருப்பதாகப் புகார்கள் எழுந்த நிலையில், அந்தத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அவற்றுக் கான மறுதேர்வு தேதி அறி விக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒன்றி கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி, உயர்கல்வித் துறை செயலர், தேசிய தேர்வு முகமையின் இயக்குநர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.

தேர்வு தொடர்பான சமீபத்திய பிரச்சினை களைத் தொடர்ந்து, என்டிஏ எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சருக்கு விளக்கப்பட்டது. மேலும், தேசிய தேர்வு முகமையை முழுவதுமாக சீர்திருத்த பிரகலாத் ஜோஷி உத்தர விட்டுள்ளதாகவும் ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரி வித்துள்ளது.

இதனிடையே, இது வரை என்டிஏவிலிருந்து 50 பணியாளர்களை நீக்கி யுள்ளதாகவும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் வகையில் பல புதிய பதிவிகளுக்கான பணியாளர் நியமனங்கள் நடைபெற்று வருவதாகவும் என்டிஏ தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து தேர்வு முறைகளையும் முழுமையாக ஆய்வு செய்து, எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு என்டிஏ-க்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தி யுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *