சென்னை, ஆக.17 கோயில் விழா நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழப்பு; கோயில் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பக்தர்கள் உயிரிழப்பு என்ற செய்திகள் வருகிறதே, இன்னுமா கடவுள் சக்தி மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
இதுபற்றிய விவரம் வருமாறு:
நெரிசலில் சிக்கி
7 பேர் உயிரிழப்பு!
7 பேர் உயிரிழப்பு!
பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோயிலில் இன்று (17.8.2026) நேரிட்ட கொடூர கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோயிலில் வழிபாட்டின் போது மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்தது என்ற வதந்தி பரவியது இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் அச்சத்தில் அலறியடித்துக் கொண்டு வெளியேற முயன்றனர். அப்போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் நிகழ்வி டத்திலேயே உயிரிழந்தனர்; மேலும் பலர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த நிர்வாக அதிகாரிகளும் காவல்துறை யினரும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அப்பகுதி யில் நெரிசலைக் கட்டுப்படுத்தி மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கோயில்கள் மற்றும் திருவிழாக்களில் போதிய பாதுகாப்பு மற்றும் கூட்ட மேலாண்மை வசதிகளை முன்னெச்ச ரிக்கையாக மேற்கொள்ளத் தவறும் நிர்வாக சீர்கேடே இது போன்ற தொடர் சோகங்களுக்குக் காரணம் என்றும், அரசுகள் இன்னமும் இதிலிருந்து பாடம் கற்கவில்லை என்றும் சமூக ஆர்வ லர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடவுளைக் காணச்சென்றவர்கள் தீயில் கருகி உயிரிழப்பு!
மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் அமைந்துள்ள தாராபீத் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கி இருந்த விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீபரவல் அதிகம் உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகமாகும் என்று தெரிகிறது 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்
மேற்குவங்கம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள தாராபீத் கோயில் அதிகம் மக்கள் வரும் கோவிலாகும் இந்தக் கோயிலுக்கு வருபவர்கள் முன்கூட்டியே வந்து அருகில் உள்ள விடுதிகளில் தங்குவார்கள்
இந்த நிலையில் திங்கள் சோமவார விரதம் இருந்து அதிகம் பேர் கோயிலுக்கு அருகில் உள்ள பல விடுதிகளில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் கோயிலுக்கு மிகவும் அருகில் உள்ள நான்கு மாடிகளைக் கொண்ட தனியார் விடுதியில் அதிகாலையில் சிலர் தனது அறையிலேயே தேநீர் குடிக்க அடுப்பு பற்றவைத்துள்ளனர் பெரிய பெரிய அறைகளில் பலகைகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தி இருந்த நிலையில் தேநீர் வைத்த அடுப்பில் இருந்த தீ ஒரு தடுப்புப் பலகையில் பட்டு தீப்பிடித்துக்கொண்டது. அதிகாலை 4.30 மணியளவில் தரைத்தளத்தில் பிடித்த தீ கண் இமைக்கும் நேரத்தில் விடுதியின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியது. இதுகுறித்துத் தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடித் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். மீட்புப் படையினர் விடுதியில் சிக்கியவர்களை மீட்டு, காயமடைந்தவர்களை உடனடி யாக சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வு குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்திற்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்மீகத் தலமான தாராபீத்தில் நடந்த இந்தத் துயர நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி
உள்ளது.
