சென்னை, ஜூலை 16 ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் S2I2 திட்டத்தின் கீழ், இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU) தனது தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள Maritime Innovation Hub (MIH) மூலம் முதல் கட்டமாக நான்கு கடல்சார் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டது. இந்த முயற்சி, கடல்சார் துறையில் புதுமை, தொழில்முனைவு மற்றும் ஸ்டார்ட்அப் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், இந்திய கடல்சார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மலினி வி. சங்கர், இணை துணைவேந்தர் டாக்டர் ராஜூ பாலாஜி, AIM-HI தலைவர் பேராசிரியர் கே. முரளி, மைய இயக்குநர் டாக்டர் ஒய்.வி.வி.எஸ்.என். மூர்த்தி, Maritime Innovation Fund (MIF PMU) பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் சூழலமைப்பைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.
தேர்வு செய்யப்பட்ட நான்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இன்குபேஷன் திட்டத்தில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்த ஆவணங்கள் மற்றும் அனுமதி கடிதங்கள் பரிமாறப்பட்டதுடன், விதை நிதிக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.
இணை துணைவேந்தர் டாக்டர் ராஜூ பாலாஜி, புதுமை, தொழில்முனைவு மற்றும் தொழில்–கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் பல்கலைக்கழகம் தொடர்ந்து உறுதியாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். பசுமை மற்றும் நீல பொருளாதாரத்தை முன்னிறுத்தும் ஸ்டார்ட்அப் முயற்சிகளுக்கு IMU தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றும் அவர் கூறினார்.
கல்வி நிறுவனங்கள், தொழில் துறை மற்றும் புதிய தொழில்முனைவோரை ஒருங்கிணைத்து, இந்தியாவின் கடல்சார் துறைக்கான தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கும் வலுவான புதுமைச் சூழலை உருவாக்கும் IMU-வின் முயற்சியில் இந்த நிகழ்வு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
சென்னையில் கடந்த 15 நாட்களில்
65 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு
65 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு
lகொசு ஒழிப்புப் பணியில் அலட்சியமா?
lபொதுமக்கள் குமுறல்!
சென்னை, ஜூலை 16 சென்னை யில் கடந்த 15 நாட் களில் மட்டும் 65 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள் ளனர். பருவநிலை மாற்றம் மற்றும் மாநக ராட்சியின் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்மையே இதற்கு முக்கிய காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டெங்கு பரவல்
பகலில் சுட்டெரிக்கும் வெயிலும், மாலை நேரங்களில் பெய்யும் திடீர் மழையும் ‘ஏடிஸ்’ (Aedes) வகை கொசுக்களின் உற்பத்திக்குச் சாதகமாக மாறியுள்ளன.
திறந்தவெளி குப்பை கிடங்குகள், முறையாக பராமரிக்கப்படாத இடங்களில் தேங்கும் மழைநீரில் கொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. சில ஆண்டுகளுக்கு முந்தைய கொசு முட்டைகள் கூட, இப்போது நன்னீர் தேங்கும்போது லார்வாக்களாக உருவெடுத்து காய்ச்சலைப் பரப்புகின்றன.
பகலில் கடிக்கும் கொசுக்கள்: டெங்குவை பரப்பும் ‘ஏடிஸ்’ கொசுக்கள் பகல் நேரங்களில் மனிதர்களைக் கடித்து இந்நோயைப் பரப்பி வருகின்றன.பொதுவாக ஜூன் மாதத்தில் தொடங்கும் டெங்கு பரவல், நவம்பர் மாதம் வரை உச்சத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தாமதமான நடவடிக்கை: டெங்கு பரவல் தொடங்கிய பின்னரே வீடுகளுக்கு கொசு மருந்து அடித்தல் மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. “இதனை ஏன் முன்னரே செய்யவில்லை?” என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தற்போது கொசுப்புழு ஒழிப்புப் பணியில் 2,073 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்.இதன்படி, 500 வீடுகளுக்கு ஒரே ஒரு பணியாளர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வளவு குறைந்த எண்ணிக்கையைக் கொண்டு ஒட்டுமொத்த நகரையும் கண்காணிப்பது சாத்தியமற்றது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாநகராட்சியின் தற்போதைய நடவடிக்கை
டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது மாநகராட்சி தனது கண்காணிப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது:இதுவரை பணிகள் தொடங்கப்படாத 8,000 புதிய கட்டுமான இடங்களைக் கண்டறிந்து மாநகராட்சி ஆய்வு மேற்கொண்டுள்ளது.இத்தகைய கட்டுமான தளங்களில் தேங்கும் நீர் கொசு உற்பத்திக்கு முக்கிய காரணியாக இருப்பதால், அங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
