கோவை, பாலக்காடு, அய்தராபாத் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் ‘ஈ-கோலி’ (E-coli) பாக்டீரியா கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவின் முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்து மத்திய தணிக்கைக்குழு (சி.ஏ.ஜி.) ஆய்வு மேற்கொண்டது. இதன்படி ரயில் நிலையங்களில் உள்ள குடிநீர் குளிரூட்டிகள், நடைமேடைகளில் உள்ள குடிநீர் குழாய்களில் இருந்து குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த ஆய்வின் முடிவில், பல்வேறு ரயில் நிலையங்களின் குடிநீரில் பாக்டீரியா இருப்பது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கோவை, பாலக்காடு, அய்தராபாத் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் வயிற்றுப் போக்கு மற்றும் உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்தக் கூடிய ‘ஈ-கோலி’ பாக்டீரியா கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. இது ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
