மக்கள் பிரச்சினையில் திமுகவுடன் போராடத் தயார் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை தீர்க்க தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

1 Min Read

புதுக்கோட்டை, ஜூன் 8– மக்கள் நலன் சார்ந்த பிரச்சினையில் திமுகவோடு சேர்ந்து போராட தயாராக உள்ளோம். சட்டம் ஒழுங்கு பிரச்னையில் தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெ.சண்முகம் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று (7.6.2026) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று தற்போது இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒத்த கருத்துடைய பிரச்சினையில் திமுகவோடு இணைந்து போராடும். இந்தியா கூட்டணியில் தான் இடது சாரி கட்சிகள் உள்ளது. இந்தியா கூட்டணியில் திமுக நிலை குறித்து விரைவில் தெரியும். அதன் பின்னர் வேறு கட்சிகள் சேருகின்றனவா என்பது தெரியும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கடந்த ஆட்சியின் நிலைபாடு தொடரும் என்று சட்ட அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளதை வரவேற்கிறோம்.

அமித்ஷா மோடியின் ஆசியோடு தான் அண்ணாமலை இயக்கத்தை தொடங்கி இருக்கிறார். பாஜக தமிழ்நாட்டில் நுழைய முடியவில்லை என்பதற்காக வேறொரு பேரில் அண்ணாமலையை வைத்து நுழைய முயற்சிக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ்–-இன் 2500க்கும் மேற்பட்ட அமைப்புகளில் அண்ணாமலை ஆரம்பித்திருக்க இயக்கமும் ஒன்று. குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பதால் தான் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம். மக்கள் நலன் சார்ந்த பிரச்சினையில் திமுகவோடு சேர்ந்து போராட தயாராக உள்ளோம். சட்டம் ஒழுங்கு பிரச்சினை யில் உடனடியாக தீர்ப்பதற்கு புதிய அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *