வினாத்தாள் கசிவுகளின் தலைநகராக பீகார் இருக்கிறது: தேஜஸ்வி

சிறப்பு புத்தக சலுகைகள்

பாட்னா, ஆக.17 பீகாரில் சட்ட – ஒழுங்கு மோசமடைந்து வருவதாகவும், மொத்த மாநிலமே வினாத்தாள் கசிவுகளின் தலை நகராக மாறி வருவதாக ஆர்ஜேடி கட்சித் தலைவர் தேஜஸ்வி குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவரான தேஜஸ்வி, 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் உள்பட போட்டித் தேர்வுகள் போன்றவற்றில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் வினாத்தாள் கசிவுகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறினார்.

இதுதொடர்பாக செய்தியாளர் களுடன் அவர் பேசுகையில், “பீகார் மாநிலம் வினாத்தாள் கசிவுகளின் தலைநகராக மாறி வருகிறது. இங்கு சட்ட – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது.

வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக மாணவர்கள் போராடு கையில், அவர்கள் தாக்கப்படு கிறார்கள். அவர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு எதிராக ஏகே-47 ரக துப்பாக்கிகள் கூட பயன்படுத்தப்படுகின்றன” என்றார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் போராட்டக்காரர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை ஆகியவற்றைக் கண்டித்து நடத்தப்பட்ட ‘பீகார் பந்த்’ போராட்டத்திற்கு ஆதரவாக, ஜூலை 25 அன்று இடதுசாரி மாணவர் அமைப்பினர் பல மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங் களை நடத்தினர்.

இதில், ஏகே-47 துப்பாக்கியைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சம்பந்தப்பட்ட காவலர் ஏற்ெகனவே இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

மாணவர்களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக பீகாரின் ‘மகாகத்பந்தன்’ கூட்டணி கட்சிகள் ஆகஸ்ட் 19 அன்று பாட் னாவில் உள்ள லோக் பவனுக்குப் பேரணி நடத்தி ஆளுநரிடம் மனு அளிக்கவுள்ளதாக தேஜஸ்வி தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் ஒரு காவலரை மட்டும் இடைநீக்கம் செய்வது போதாது என்று கூறிய தேஜஸ்வி, அதற்கு காரணமான உயர் அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *