நார்வேயில் இந்தியத் தூதர் சி.பி.ஜார்ஜ் சர்ச்சை பேச்சு ஊடகவியலாளர்களை ‘முட்டாள்கள்’ என விமர்சனம்!

1 Min Read

ஒஸ்லோ, மே 20- நார்வே நாட்டிற்கான இந்திய தூதர் சி.பி. ஜார்ஜ் அந்நாட்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது தற்பொழுது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அண்மையில் நார்வே நாட்டு செய்தியாளர்கள் இந்திய தூதர் சி.பி. ஜார்ஜிடம் இந்தியாவின் தற்போதைய நிலவரம் குறித்து சில கேள்விகளை எழுப்பினர்.

குறிப்பாக, “இந்தியாவில் ஏன் ஊடக சுதந்திரம் இல்லை?” மற்றும் ”அங்குள்ள சிறுபான்மையினர் ஏன் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் (வஞ்சிக்கப்பட்டு) நடத்தப்படுகிறார்கள்?” போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தனர்.

செய்தியாளர்களின் இந்தக் கேள்விகளால் அதிருப்தியடைந்த தூதர் சி.பி. ஜார்ஜ், முதலில் அந்த வெளிநாட்டு ஊடகவியலாளர்களை “முட்டாள்கள்” என்று விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் பெருமைமிக்க கலாச்சாரம் மற்றும் ஒரு சிறந்த நாட்டின் பாரம்பரியம் குறித்துப் பேசத் தொடங்கினார்.

மேலும், “இந்தியா வில் யாருடைய உரிமை களாவது மீறப்பட்டால், அதனை அணுகுவதற்கு அங்கு மிகச்சிறந்த நீதிமன்ற அமைப்பு உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கு ஊடகவிய லாளர் ஏன் நீதிமன்றத்தை அணுகுவதற்கு சாதாரன குடிமகனை நிர்பந்திக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் இது செய்தியாளர் சந்திப்பு விவாத மேடை அல்ல என்று கடுமையான தொனியில் கூறினார்.

வெளிநாட்டு மண்ணில் இந்திய தூதர் ஒருவர் ஊடகவியலாளர்களை விமர்சிக்கும் தொனியில் பேசியிருப்பது தற்பொழுது சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங் களிலும் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *