குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் தாக்கீது

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.16  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் குறித்து, சமூக வலைதளங்கள் கட்டாயம் புகாரளிப்பதற்கான வழிகாட்டு நடைமுறைகளை செயல்படுத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளுக்கான நீதி உரிமை கள் கூட்டமைப்பு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘‘போக்சோ சட்டம் மற்றும் அதன் கீழ் வகுக்கப்பட்ட விதிகளின்படி, குழந்தைகளின் ஆபாசப் படங்கள், அவர்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல்கள் கொண்ட உள்ளடக்கங்கள் குறித்து சமூக வலைதளங்கள் கட்டாயமாகப் புகாரளிக்க வேண்டும்.

குறிப்பாக, சிறார்களுக்கான சிறப்பு காவல் பிரிவுக்கோ அல்லது உள்ளூர் காவல்துறையினரிடமோ புகாரளிக்க வேண்டுமென்று, உச்ச நீதிமன்றம் கடந்த 2024 இல் தீர்ப்பளித்தது.

குற்றவியல்
நடவடிக்கை

ஆனால், 2 ஆண்டுகள் ஆகியும், அந்தத் தீர்ப்பு உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் உள்ளடக்கம் குறித்து புகார் அளிக்கத் தவறும் சமூக வலைதளங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ என்று கோரப்பட்டு உள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும்!

மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல், கட்டாயமாக புகாரளித்தல், மின்னணு ஆதாரங்களைப் பாது காத்தல், விசாரணை முகமை களுக்கு இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கி ஒரு வழிகாட்டு நெறி முறைகளை வகுக்க வேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளது.

அந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ. பி. பார்திவாலா மற்றும் வினோத் சந்திரன் ஆகி யோர் அடங்கிய அமர்வில் விசார ணைக்கு வந்தது. அப்போது, மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், இது தொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க தாக்கீது பிறப்பித்து உத்தரவிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *