வாரணாசி, ஆக. 16- உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி விமான நிலையத்தில் துப்பாக் கிச்சூடு நடத்தப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாரணாசியில் இருந்து மும்பைக்கு செல்லவிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், தான் வைத்திருந்த துப்பாக்கி யால் திடீரென சுட்டு உள்ளார். இதில் சரக்கு கையாளுகை மற்றும் அதன் தொடர்புடைய சேவை நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் பலத்த காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் படையினர், உடனடியாகச் செயல்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்திய நபரைப் பிடித்து கைது செய்தனர்.
காயமடைந்த இரண்டு ஊழியர்களும் உடனடியாக மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயர் பாதுகாப்பு மண்டலமான விமான நிலையத்திற்குள், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் (CISF) பலகட்ட சோதனை களையும் தாண்டி பாதுகாப்பு விதிகளை மீறி அந்த பயணி எவ்வாறு துப்பாக்கியை எடுத்துச் சென்றார் என்பது குறித்து விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளும் காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
