சுதந்திர நாளில் சிஜேபியின் அதிகாரப்பூர்வ கணக்கு முடக்கம்! ‘கோழைகள்’ என சிஜேபி பதிவு

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.16 சுதந்திர நாளான நேற்று (15.8.2026) தங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு காலையில் முடக்கப் பட்ட நிலையில், தற்போது அது மீண் டும் சரி செய்யப்பட்டுள்ளதாக கரப் பான் பூச்சி கட்சி (சிஜேபி) தெரிவித்துள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்து 80 ஆணடுகள் ஆன நிலையில், ஆகஸ்ட் 15 அன்று எங்கள் கணக்கு முடக்கப்படுவது, சுதந்திர நாளன்று எங்கள் குரலை ஒடுக்கும் முயற்சியாக உள்ளது என சிஜேபி கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிஜேபி வெளியிட்ட பதிவில், “காக்ரோச் ஜனதா கட்சியை எதிர்ப்பவர்கள் எங்கள் குரலை ஒடுக்க முயற்சிப்பதற்காக நினைக்கிறார்கள். இந்தியாவின் சுதந்திர நாளில் (15.8.2026) காக்ரோச் ஜனதா கட்சியை அமைதியாக்க முயற்சிப்பது வெட்கக்கேடானது.

எங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ள கோழைத்தனமான செயல் களை கண்டு, நாங்கள் அஞ்ச மாட்டோம்,” என்று தெரிவித்துள்ளது.

இந்த முடக்கம் குறித்து சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே கூறுகையில், “அவர்கள் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கியுள்ளனர், கோழைகள்!” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து நேற்று பிற்பகுதியில் தங்கள் கணக்கு மீட்டெடுக்கப்பட்டதாக சிஜேபி தெரிவித்துள்ளது.

முன்னதாக வேலையின்மை, கல்வி மற்றும் இளைஞர்களிடையே உள்ள கவலைகள் குறித்த கேள்விகளை எழுப்பி, பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர நாள் உரையில் நாட்டின் இளைஞர்களை சந்தித்து பேச வேண்டும் என்று வலியுறுத்தி தனது பிரச்சாரத்தை தொடங்கியிருந்தார்.

இதைத்தொடர்ந்து தங்கள் கணக்கு முடக்கப் பட்டுள்ளதாக சிஜேபி தெரிவித் துள்ளது. மேலும், அரசு மற்றும் கிராம பள்ளிகளின் நிலை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மாணவர்கள் மற்றும் கல்வி தொடர்பான பிரச்சினைகள் குறித்த போராட்டங்கள் உள்ளிட்ட, சமீப வாரங்களில் சி.ஜே.பி. நடத்தி வரும் தொடர் பிரச்சாரங்களுக்கு மத்தியில் இந்த வகையிலான முடக்கம் ஏற்பட்டுள்ள தாகவும் சிஜேபி தெரிவித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *