மணிப்பூர் மாநிலம், காக்சிங் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக ஏஞ்சலின் ரெனித்தா பொறுப்பேற்றுள்ளார். அந்த மாநிலத்தின் மிக இளவயது மாவட்ட ஆட்சியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் வழியில் கல்வி பயின்ற இம்மாணவிக்கு, மணிப்பூர் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பு கிடைத்துள்ளது. அம்மாநிலத் தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.
