பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் ஜாதி ஒழிப்புப் பணிக்குப் பாராட்டு

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

பெரியார் திடலில் 1974ஆம் ஆண்டு முதல் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் தொடங்கப்பட்டு ஜாதி ஒழிப்புப் பணியில், சுயமரியாதைத் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ‘ஜாதி கெடுத்தவள்’ என சிலரால் வாழ்த்துப் பெற்ற திருமகள் இறையன் இயக்குநராக இருந்தபோது அதிகளவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மதுரை நட்பு தமிழ் வட்டம் சார்பில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலோடு ஜாதி மறுப்புத் திருமணங்களை அதிக அளவில் நடத்திடும் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்திற்கும், அதன் இயக்குநர் பசும்பொன்னுக்கும் ‘ஆளுமை மகளிர்’ விருது வழங்கப்பட்டது.

அதனையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பசும்பொன் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன்: இணையர் இசையின்பன் (சென்னை, 13.8.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *