நேற்று அம்மன் கோயில்களில் ஆடிப்பூரம் கொண்டாடப்பட்டது. ஆண்டாள் அம்மையார் அவதரித்த நாளாகக் கருதப்படுகிறது. ‘‘திருவல்லிக்கேணி ஆண்டாள் திரு மஞ்சனமும், ஆண்டாள் பெரிய மாட வீதி புறப்பாடும் நடந்தன’’ என்று ஒரு நாளேட்டில் செய்தி வெளிவந்துள்ளது.
ஆண்டாள் என்பவர் வைணவ மதத்தின் ஆழ்வார்களுள் ஒருவர் எனப் போற்றுகிறார்கள்.
உண்மை என்னவென்றால், ஆண்டாள் என்ற ஒருவர் கிடையாது; அது சுத்தக் கற்பனை. வைணவப் பிரிவுக் கொழுந்தான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) என்ன சொல்லுகிறார்?
‘‘ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததே இல்லை. ‘நாலாயிரப் பிரபந்தத்தில்’ ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவை அல்ல. பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சிவ பாசுரங்களைப் பாடி அப்பா சுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார்’’ என்று ‘திரிவேணி’ என்னும் பத்திரிகையில் 1946ஆம் ஆண்டு செப்டம்பர் இதழில் எழுதியுள்ளார். எப்படி இருக்கிறது?
