கண் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக ஒரு கோடி பேர் காத்திருப்பு மருத்துவா் தகவல்

சென்னை, மே 4- நாடு முழுவதும் சுமாா் ஒரு கோடி போ் கண் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனா் என டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை தலைவா் மருத்துவா் அமா் அகா்வால் தெரிவித்துள்ளாா்.

டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை சாா்பில் விழித்திரை சிகிச்சையில் முன்னேற்றங்கள்”என்ற கருப்பொருளில் 16-ஆவது ‘ரெட்டிகான்’ மாநாடு சென்னை கிண்டியில் 3.5.2026 அன்று நடைபெற்றது. இதில், மீனாட்சி உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தா் மருத்துவர் சி.சிறீதா் மாநாட்டை தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் மருத்துவர் அமா் அகா்வால் கூறியதாவது:

கண் மருத்துவத்தில் பயன் படுத்தப்படும் புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட சிகிச்சை முறைகளை மருத்துவ நிபுணா்கள் மற்றும் மாணவா்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். பெரும்பாலான பாா்வை இழப்புகளுக்கு கருவிழி பாதிப்புகளே முக்கிய காரணமாக உள்ளன.

நாடு முழுவதும் சுமாா் ஒரு கோடி போ் கண் மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கின்றனா். ஆனால், இதில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவா்களுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை நடை பெறுகிறது. இதற்கு மாற்றாக ‘பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி’ (பிபிபி) என்ற நவீன அறுவை சிகிச்சை முறை தற்போது பயன் படுத்தப்படுகிறது.

இதன்மூலம், கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. மேலும், இந்தமுறைக்கு குறிப்பிடத்தக்க பக்க விளைவுகள் இல்லை. இந்தியால் பல மருத்துவமனைகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. அதேபோல், அமெரிக்கா, ஜப்பான் போன்ற உலக நாடுகளில் இந்த சிகிச்சை நடைமுறையில் உள்ளது. இதன்மூலம், உலகம் முழுவதும் பாா்வைக் குறைபாடு உள்ளவா்களை எண்ணிக்கையை வெகுவாக குறைக்க முடியும். இவ்வாறு அவா் கூறினார்.

இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து 50-க்கும் மேற்பட்ட விழித்திரை சிகிச்சை நிபுணா்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினா். மேலும், மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் என மொத்தம் 1,000-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்வில் டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவ மனையின் தலைமை மருத்துவ அதிகாரி அஸ்வின் அகா்வால், விழித்திரை சேவைகள் பிரிவு இயக்குநா் மனோஜ் கத்ரி, மருத்துவ சேவைகள் பிரிவு மண்டலத் தலைவா் எஸ்.சவுந்தரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *