தொழில் வர்த்தகக் கண்காட்சி – 2026இல் பெரியார் பாலிடெக்னிக்கில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்பு

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

வல்லம், ஆக. 15- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள Pre-incubation Centre –சார்பாக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்ட தேசிய அளவிலான MSME அரசு பொதுத்துறை நிறுவனங்களின் தொழில் வர்த்தக கண்காட்சி – 2026, NIT, திருச்சியில் 31.07.2026 மற்றும் 01.08.2026 ஆகிய தேதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இக்கண்காட்சியில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூ ரியை சேர்ந்த 50 மாணவர்கள் மற்றும் 3 பேராசிரியர்கள் பங்கேற்றனர். இந்த கண்காட்சியில் 15-க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் பங்கேற்றன. Vendor Registration & Procurement, GeM மூலம் அரசு கொள்முதல் வாய்ப்புகள், நேரடி B2B சந்திப்புகள், தொழில் ஆலோசனைகள் மற்றும் இலவச கருத்தரங்குகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

மாணவர்கள் அரசு நிறுவனங் களின் செயல்பாடுகள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில் தொடங்கும் வாய்ப்புகள் குறித்து நேரடியாக அறிந்து கொண்டனர். MSME துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் முனைவோர் வாய்ப்புகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பங்கேற்ற மாண வர்கள், தங்களது தொழில்நுட்ப அறிவை வளர்ப்பதற்கும், எதிர்கால தொழில் வாய்ப்புகளை புரிந்து கொள்வதற்கும் பெரிதும் உதவியாக இருந்தது என்று தெரிவித்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இக்கல்லூரியின் முதல்வர், Periyar Foundation Pre-incubation-ன் தலைமை செயல் அதிகாரி, மேலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றியை மாணவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *