நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக. 14- தேசிய நெடுஞ்சாலைகளில் சேவைகள் வழங்கும் மருத்துவ அவசர ஊர்தி கள் (ஆம்புலன்ஸ்கள்) அதன் 10 கி.மீ. தொலைவுக்குள் ஏற்படும் விபத்து கள் குறித்த தகவல் கிடைத்த 10 நிமிடங் களுக்குள் வராவிட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்எச்ஏஅய்) தெரிவித்தது.

தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை கையாள்வது தொடா்பான புதிய விதிகளை என்எச்ஏஅய் வெளியிட்டது.

அதில், ‘என்எச்ஏஅய் வரம்புக் குள்பட்ட 50,000 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைகளில் 3,000 ஆம்புலன்ஸுகள், 1,000 ரோந்து வாகனங்கள் மற்றும் கிரேன்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. 10 கி.மீ. சுற்றளவுக்குள் நிகழும் விபத்துகள் குறித்த தகவல் கிடைத்த 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸுகள் செல்ல வேண்டும். அதற்கு மேல் நேரம் எடுத்துக்கொள்ளும் ஆம்புலன்ஸுகளுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.

விபத்துப் பகுதிக்கு 10 நிமிஷத்துக் குள் சென்றடைந்த பின் காயமடைந்த நபரை அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்த கால அவகாசத்துக்குள் மருத்துவமனைக்குச் செல்லாத ஆம்புலன்ஸுக்கும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல் அவசர கால அழைப்பை ஏற்காவிட்டால் ரூ.10,000, ஒப்பந்த விதிகளின்படி ஒரு ஆம்புலன்ஸுக்குத் தேவையான உபகரணங்கள், மருந்துகள் மற்றும் ஊழியா்கள் இல்லையெனில் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.

10 கி.மீ. சுற்றளவை தாண்டி விபத்துகள் ஏற்படும்பட்சத்தில் அங்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கான காலஅவகாசம் தூரத்துக்கேற்ப அதிகரிக்கப்படும்.

என்எச்ஏஅய் பராமரிப்பு அமைப்பு முறையாக அமல்படுத் துவதை உறுதிசெய்ய ஏஅய்எஸ்-140 தரநிலைக்கு இணக்கமான ஜிபிஎஸ் கருவிகளை ஆம்புலன்ஸுகள், ரோந்து வாகனங்கள் மற்றும் கிரேன்கள் என அனைத்திலும் கட்டாயம் பொருத்த வேண்டும்.

சாலையில் பணியில் இருக்கும் ஒவ்வொரு பிரிவுக்கும் இணைய வசதியுடன் கூடிய ஆண்ட்ராய்டு கைப்பேசி மற்றும் சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை வலையமைப்புக் கென தனிச்சிறப்பு 1033 என்ற உதவி எண்ணும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

எனவே, மேற்கூறிய விதிகளை அனைத்து திட்ட இயக்குநா்கள் மற்றும் வட்டார அலுவலா்களும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங் களில் முறையாக பின்பற்ற உத்தரவிடப்படுகிறது’ எனத் தெரி விக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *