புதுடில்லி, ஆக.25 புதுடில்லியில் நடைபெற்ற அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் (யுஎப்பியு) ஆலோசனைக் கூட்டத் தில், வங்கி ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் குறித்து அரசின் எதிர்மறை அணுகுமுறை விவாதிக்கப் பட்டது.
வாரத்தில் 5 நாள்கள் வேலை நாள்கள் மற்றும் செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி, வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட 9 வங்கிச் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
தொடர் விடுமுறையால்
சேவைகள் பாதிப்பு
செப்டம்பர் 11 (வெள்ளி): நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம் செப்டம்பர் 12, 13: சனி மற்றும் ஞாயிறு வாராந்திர வங்கி விடுமுறையாகும். செப்டம்பர் 14: விநாயகர் விழா விடுமுறை. இதனால் தொடர்ந்து 4 நாள்கள் பொதுத்துறை வங்கிகளின் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
வேலை நிறுத்த எச்சரிக்கை
அரசும் வங்கி நிர்வாகமும் தங்களது கோரிக்கைகளை ஏற்கா விட்டால், செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் 3 நாள்கள் மீண்டும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திலும், அதைத் தொடர்ந்து அக்டோபர் 26-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திலும் ஈடுபடப் போவதாக யுஎப்பியு எச்சரித்துள்ளது.
