நாடாளுமன்றத்தின் கடைசி நாளும் முடங்கியது! மக்களவை – மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.14– மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்றும் ஒன்றிய அரசின் பிடிவாதப் போக்கால் முடங்கிய நாடாளுமன்றம், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் கூட்டத்தொடர் 19 நாட்களும் இரண்டு அவைகளும் முழுமையாக முடங்கின.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே காவிரி நீர், மேக தாது பிரச்சினை, நீட் போராட்டம், அயோத்தி கோயில் நன்கொடை உள்ளிட்ட பல்வேறுபிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று (13.8.2026) மக்களவைகூடியதும், காவிரிநதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணைப் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தின.

இதற்கு அனுமதி வழங்க மறுத்த மக்களவைத் தலைவர், மக்களவை தொடங்கிய உடனே தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

மாநிலங்களவையும் ஒத்திவைப்பு

இதேபோல், மாநிலங்களவையிலும், காவிரி நதிநீர்ப் பங்கீடு மற்றும் மேகதாது அணை பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இருப்பினும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை மாநிலங்களவை தலைவர் ஏற்கவில்லை. இதை யடுத்து, மாநிலங்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

மோடியின் நண்பர் அதானிக்கு தாராளம்!

83,800 சதுர அடி வன நிலத்தை விடுவித்த மகாராட்டிரா பாஜக அரசு

மும்பை, ஆக.14 மகாராட்டிராவில் பாஜககூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார்.

இந்நிலையில், மகாராட்டிரா மாநிலம் ராய்காட்டில் உள்ள அதானி சிமெண்டேஷன் நிறுவன முனை யத்திற்காக அடர்ந்த காடு மற்றும் அலையாத்தி (மாங்குரோவ்) பகுதியில் 70,000 சதுரஅடியும், அமராவதியில் எரிவாயுகுழாய்க்காக 13,800 சதுர அடி வன நிலங்களையும் அம்மாநில அரசு அதானிக்காக தாரைவார்த்துள்ளது.

அதாவது அதானி சிமெண்ட் பெருந்தொகுதி முனையத்திற்காக ராய்காட் மாவட்டம் அலிபாக் தாலு காவில் உள்ளஷாபூர் மற்றும்ஷாபாஜ் கிராமங்களில் 0.6497 ஹெக்டேர் அல்லது 69,933 சதுர அடிபரப்ப ளவுள்ள அதிக மரங்களைக்கொண்ட காடு, அலையாத்தி காடு மற்றும் ஓடை அலையாத்தி காடு நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதே போல அதானி டோட்டல்கேஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 0.1281 ஹெக்டேர் அல்லது சுமார்13,788 சதுர அடி ஒதுக்கப்பட்ட மற்றும் அடையாளம் காணப்பட்ட வன நிலத்தை மாற்ற அரசு ஒப்புதல்அளித்துள்ளது. அமராவதி நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இயற்கை எரிவாயு வழங்குமு் வலையமைப்பை அமைப்பதற்காக நிலத்தடியில் எஃகு குழாய்களைப் பதிப்பதற்கு கூடுதலாக அதானி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்த உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

எய்ம்ஸ், லோகியா மருத்துவமனைகள் பெல்லட் குண்டு தாக்குதல்

புதுடில்லி, ஆக.14 திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யின் மூத்ததலைவர் சாகேத் கோகலே தகவல் உரிமை சட்டத்தின் (ஆர்டிஅய்) அடிப்படையில் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி, சப்தர்ஜங், எய்ம்ஸ் டில்லி), ராம் மனோகர்லோகியா ஆகிய 4 மருத்துவமனைகளில்,“ஜூலை 20 அன்று தில்லி நாடாளுமன்ற கட்டடம் அருகே பெல்லட் குண்டு தாக்குதலில் காயமடைந்தமாணவர்களின் விபரங்களை மற்றும் காயமடைந்த ஒட்டுமொத்த மாணவர்கள் – இளைஞர்களின் விபரத்தை தர வேண்டும்” என கோரியிருந்தார்.

லேடி ஹார்டிங்சாகேத் கோகலேவின் கேள்விக்கு பதில் அளித்த லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி,“9 பேர் பெல்லட் துப்பாக்கி காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். அதே போல மற்ற காயங்களுக்கு மொத்தம் 81 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 35 பேர் காவல்துறையினர், 46 பேர்போராட்டக்காரர்கள்” என அதில் கூறப்பட்டுள்ளது.

சப்தர்ஜங் சப்தர்ஜங் மருத்துவமனை,“ஒரே ஒருநபர் மட்டுமே பெல்லட் துப்பாக்கி காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற காயங்களுக்கு மொத்தம் 25 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என தகவல் அளித்துள்ளது. எய்ம்ஸ், ராம் மனோகர் லோகியா மருத்துவமனைகளின் பதில்கள் இன்னும் வரவில்லை.

அதாவது ஆர்டிஅய் கேள்விக்கு இரு மருத்துவமனைகளும் பதிலளிக்க மறுத்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளன.சாகேத் கோகலேவின் ஆர்டிஅய் கேள்விக்கு முன்பு, 5 பேர் மட்டுமே பெல்லட் துப்பாக்கி காயங்களுக்கு ஆளாகியதாக ஒன்றிய மோடி அரசுதெரிவித்தது. இதன்மூலம் பெல்லட் குண்டு தாக்குதலில் 5 பேர் அல்ல ; 10 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்ற மோடி அரசின் அப்பட்டமான பொய் தற்போது அம்பலமாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *