இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக உருவெடுக்கும் தமிழ்நாடு! பன்னாட்டுப் போட்டிகளின் சங்கமம்!

2 Min Read

சென்னை, ஏப்.22- தமிழ்நாட்டை மற்ற துறைகளில் உயர்த்துவது போன்றே, விளையாட்டுத் துறையிலும் முதன்மை மாநிலமாக மாற்றப்படும் என திமுக அரசு அறிவித் திருந்தது.

அந்த வாக்குறுதியைச் செயல்படுத்தும் விதமாக, கடந்த சில ஆண்டுகளில் பன்னாட்டுத் தரத்திலான பல்வேறு போட்டிகளை நடத்தி, தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக மாற்றும் முன்னெடுப்புகளை அரசு தீவிரப் படுத்தியுள்ளது.

சதுரங்கப் புரட்சி: உலகத்தையே வியக்க வைத்த சதுரங்க ஒலிம்பியாட்

இந்திய வரலாற்றில் முதன்முறையாக, மாமல்லபுரத்தில் 44ஆவது பன்னாட்டு சதுரங்க ஒலிம்பியாட் போட்டி மிகச் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. இதில் உலகெங்கிலும் உள்ள 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, 2024இல் 16 பன்னாட்டு மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்ற சென்னை சதுரங்க கிராண்ட் மாஸ்டர் போட்டியும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

மீண்டெழுந்த
பன்னாட்டுப் போட்டிகள்

நீண்ட இடை வெளிக்குப் பிறகு பல முக்கிய விளையாட்டுப் போட்டிகள் சென்னைக்குத் திரும்பியுள்ளன.

டென்னிஸ்: 2022இல் சென்னை ஓபன் (WTA) பன்னாட்டு சாம்பியன்ஷிப்.

ஸ்குவாஷ்: 12 ஆண்டு களுக்குப் பிறகு 2023இல் பன்னாட்டு ஸ்குவாஷ் போட்டி.

ஹாக்கி: 16 ஆண்டு களுக்குப் பிறகு 2023இல் 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி (ஆடவர்) சென்னையில் நடைபெற்றது. மேலும், 2025இல் முதன்முறையாக 14ஆவது ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை சென்னை மற்றும் மதுரையில் நடத்தப் பட்டது.

புதிய களங்கள்:
கார் பந்தயம் மற்றும் சர்ஃபிங்

விளையாட்டுத் துறையில் நவீன மாற்றங் களைப் புகுத்தும் நோக்கில் தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் நைட் ஸ்ட்ரீட் சர்க்யூட்  கார் பந்தயம் நடத்தப்பட்டது. இதன் மூலம் இத்தகைய போட்டியை நடத்திய ஒரே தெற்காசிய நகரம் என்ற பெருமையை சென்னை பெற்றது.

2023இல் பன்னாட்டு அளவிலான உலக சர்ஃபிங் லீக் (Surfing) போட்டிகள் மிகச் சிறப்பாகத் திட்ட மிடப்பட்டு நடத்தப்பட்டன.

தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டி 2024: நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

டேபிள் டென்னிஸ்: 2025இல் உலக டென்னிஸ் (WTT) ஸ்டார் கண்டெண்டர் போட்டி ஸ்டூபா ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் நிறுவனத் துடன் இணைந்து நடத்தப்பட்டது.

முக்கியக் குறிப்பு: பன்னாட்டுத் தரத்திலான உள்கட்டமைப்பு மற்றும் திட்டமிடல் மூலம், தமிழ்நாட்டின் விளையாட்டு வரலாறு புதிய உச்சத்தை எட்டி யுள்ளது. இது உலக அரங்கில் தமிழ்நாட்டின் வீரர்களுக்கான அங்கீ காரத்தையும், மாநிலத் திற்கான பெருமையையும் தேடித் தந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *