திருச்சி, ஆக.13- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர் ஏ.கவிநிதி, அண்மையில் மண்டல அளவில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்று, தனது தன்னிகரற்றத் திறமையை வெளிப்படுத்தி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தளராத உழைப்பையும், விடாமுயற்சியையும் கொண்டு இந்தச் சிறப்பான வெற்றியை ஈட்டியுள்ள மாணவர் கவிநிதி, அடுத்ததாக நடைபெற இருக்கும் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
பள்ளியின் புகழை விளையாட்டுத் துறையில் உயரச் செய்துள்ள மாணவர் கவிநிதி அவர்களுக்கும், அவருக்குச் சிறந்த முறையில் பயிற்சி அளித்து வழிநடத்திய உடற்கல்வி ஆசிரியர்கள் கோகுல் மற்றும் சவுமியா ஆகியோருக்கும் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், அலுவலகப் பணித் தோழர்கள் மற்றும் சக மாணவச் செல்வங்கள் அனைவரும் தங்களது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டதோடு, வரவிருக்கும் மாவட்ட அளவிலான போட்டி யிலும் அவர் வெற்றி வாகை சூடி பள்ளிக்குப் பெருமை சேர்க்க தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
