வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப ஒன்றிய அரசு திட்டம்

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக. 12- வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எப்சிஆர்ஏ மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு (ஜேபிசி) அனுப்ப ஒன்றிய அரசு திட்ட மிட்டு உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்திய தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் நன்கொடைகளை வரன்முறைப்படுத்த வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா (எப்சிஆர்ஏ) கடந்த மார்ச் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்ற ஒன்றிய அரசு முனைப்பு காட் டியது.

ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், எப்சிஆர்ஏ மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த சில கட்சிகளும் மசோதா குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளன.

இதுதொடர்பாக பாஜக மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறும் போது, “எப்சிஆர்ஏ மசோதாவை காங்கிரஸ், திரிணமூல் காங் கிரஸ் கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. அந்த கட்சிகள் மசோதாவை கைவிட கோருகின்றன. வேறு சில கட்சிகள் மசோதாவை, நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப கோரி வருகின்றன.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதில் மசோ தாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப ஒருமித்த கருத்து எட்டப்பட்டு உள்ளது. எனவே நடப்பு கூட்டத் தொடரில் எப்சிஆர்ஏ மசோதா எடுத்துக் கொள்ளப்படாது. இந்த மசோதா ஜேபிசி-க்கு அனுப்பப்படும்” என்றார்.

பல்வேறு கிறிஸ்தவ, முஸ்லிம் தொண்டு அமைப்புகள் எப்சி ஆர்ஏ மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்த அமைப் புகளின் நிர்வாகிகள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசி உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *