காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு உடனடியாக திறக்க வேண்டும் ஒன்றிய அமைச்சரிடம் நாகை எம்.பி. செல்வராஜ் கோரிக்கை

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக. 13– “காவிரி நீரை தமிழ் நாட்டுக்கு உடனடியாக திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஒன்றிய அமைச்சரிடம் நாகை எம்.பி. செல்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை சந்தித்து அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி யுள்ள விவசாயம், பொதுமக்களின் குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரை உடனடியாக திறந்துவிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீர் மேலாண்மை அமைப்புகளால் அறிவிக்கப்பட்டுள்ள நீரளவை, தமிழகத்தின் தற்போதைய குடிநீர் மற்றும் அத்தியாவசிய நீர்த் தேவைகளை கருத்தில் கொண்டு, எந்தவித தாமதமும் இன்றி தமிழ்நாட்டிற்கு திறந்துவிட சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கும் அதிகாரி களுக்கும் ஒன்றிய அரசு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

குறிப்பாக, தமிழ் நாட்டின் பல பகுதிகளில் குடிநீருக்கே கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை நிலவுவதால், காவிரி நீர் தொடர்பான பிரச்சினையில் ஒன்றிய அரசு உடனடியாக தலை யிட்டு, தமிழ்நாட்டின் நியாயமான நீர்ப்பங்கை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே கருநாடக மாநிலத்தில் முன்மொழியப்பட்டுள்ள மேகதாது அணைத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி நீரை நம்பியுள்ள தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி மற்றும் கேரளா உள்ளிட்ட கீழ்ப்பகுதி மாநிலங்களின் குடிநீர் மற்றும் பிற அத்தியாவசிய நீர்த் தேவைகளிலும் இத்திட்டம் எதிர்மறையான தாக் கத்தை ஏற்படுத்தும். இவ்விஷயத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு உரிய நட வடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் அவர் தெரிவித்து உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *