மயிலாடுதுறை மாவட்ட நூலகத்திற்கு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் நான்கு லட்சம் மதிப்புள்ள நூல்கள் அன்பளிப்பு!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

மயிலாடுதுறை, ஆக. 11– தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொதுமக்கள் வழங்கிய நூல்களில் சுமார் ரூபாய் நான்கு லட்சம் மதிப்புள்ள 1,500 புத்தகங்களை குத்தாலம் சட்டமன்ற மேனாள் உறுப்பினர் க.அன்பழகன் மயிலாடுதுறை மாவட்ட மய்ய நூலகத்திற்காகக் கேட்டுப் பெற்று 10.8.2026 அன்று மாலை 5 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நூலகரிடம் அளித்தார்.

இந்நிகழ்விற்கு தி.மு.க உயர் மட்ட செயல் திட்டக் குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம் தலைமையேற்க திமுக ஒன்றிய செயலாளர் முருகமணி, குத்தால நகர செயலாளர் சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நூலக வாசகர் வட்ட தலைவர் கி.தளபதிராஜ் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஓய்வுபெற்ற  வட்டாட்சியர் இராமகிருஷ்ணன், வாசகர் வட்ட புரவலர் சே.ஆராமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கிட வாசகர் வட்ட துணைத்தலைவரும், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவருமான இரெ.செல்லதுரை நன்றி கூறினார்.  இந்நிகழ்வில் கிளை நூலகர்கள், ஒய்வு பெற்ற துணை ஆட்சியர் மகாலிங்கம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தங்க செல்வராஜ், ஒன்றிய கழக தலைவர் அ.சாமி துரை, தமுமுக பாஷீத், சாமி.கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *