சென்னை, ஆக. 11- சோழிங்க நல்லூர் மாவட்டக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 09.08.2026 அன்று காலை 10 மணியளவில் மாவட்டத் துணைத் தலைவர் ஆர். கலைச்செல்வன் தலைமையில், மாவட்டக் காப்பாளர் ஆர்.டி. வீரபத்திரன் முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் க.தமிழினியன் கடவுள் மறுப்புக் கூறி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’ நூல் அறிமுக விழா ஆகிய நிகழ்ச்சிகளின் வரவு–செலவுக் கணக்குகளை மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு சமர்ப் பித்து, நோக்கவுரையாற்றினார்.
தொடர்ந்து, மாவட்ட நிதியின் கடந்த மூன்று மாதங்களுக்கான வரவு–செலவுக் கணக்குகளை மாவட்டச் செயலாளர் க.தமி ழினியன் சமர்ப்பித்து, அதன் விவ ரங்களை விளக்கினார்.
மாவட்டக் காப்பாளர் ஆர்.டி. வீரபத்திரன் அவர்கள் கழகத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்து தமது அனுபவக் கருத்துகளைப் பகிர்ந்து கருத்துரையாற்றினார். புலவர் சங்கரலிங்கம் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன:
பெரியார் பன்னாட்டு அமைப் பின் சார்பில் ‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது’ பெற்ற கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களுக்கு சோழிங்கநல்லூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
மாநிலம் தழுவிய நீட் விலக்கு மற்றும் EWS முறையை முற்றிலும் ஒழித்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்திற்கு கடைசி நேரத்தில் தடை விதித்த தோடு, சென்னை பெரியார் திடலில் காவல்துறையினரைக் குவித்து, வாயில்களை மூடி அராஜகப் போக்கில் செயல்பட்ட த.வெ.க. அரசின் நடவடிக்கைக்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
மாவட்டத்தின் சார்பில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தெருமுனைக் கூட்டம் நடத்திட தீர்மானிக்கப்பட்டது.
ஏற்கெனவே தீர்மானிக்கப் பட்டுள்ள பெரியார் பயிற்சிப் பட்டறை குறித்து பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொள்ளும் வகையில், விரைவில் ஒரு தெருமுனைக் கூட்டம் நடத்திட தீர்மானிக்கப்பட்டது.
கடந்த மாதம் நடத்தப்பட்ட இரண்டு நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையை மாவட்ட நிதியிலிருந்து ஈடு செய்திட தீர்மானிக்கப்பட்டது.
பங்கேற்றோர்
பொதுக்குழு உறுப்பினர் பி.சி. ஜெயராமன், புலவர் சங்கரலிங்கம், மகளிர் அணி தலைவி தேவி சக்திவேல், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் த. ஆனந்தன், சரவணகுமார் (கீழ்க்கட்டளை) உள்ளிட்ட தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
