தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்! மேனாள் அமைச்சர் ரகுபதி வலியுறுத்தல்

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 11- மேனாள் அமைச்சர் ரகுபதி, தலைமைச்செயலக வளாகத்தில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

திமுக ஆட்சியில் அப்போதைய அமைச்சராக இருந்த கோவி.செழியன் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம் என்ற தீர்மானத்தை கொண்டு வந்து அது நிறைவேற்றப் பட்டது.

அதன் பின்னர் எல்லா நிகழ்ச்சிகளிலும்  அவ்வாறு பின்பற்றப்பட்டன. தற்போது முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தீர்மானம் ஆளுநரையோ, மற்றவர்களையோ கட்டுப்படுத்துமா என்பது சந்தேகம்தான்.

இதற்கு ஒரு மசோதா கொண்டு வந்து சட்டப் பூர்வ அங்கீகாரத்தை பெற்றதால் அவை நிலைத்து நிற்க முடியும். ஒன்றிய அரசு என்று சொல்லவே பயப்படும் இந்த அரசு சட்ட மசோதா கொண்டு வருமா? என்பது சந்தேகமாக உள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் கருத்து. எனவே, சட்ட வடிவம் தேவை, தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்க்க வேண்டும்.

இல்லையென்றால் தமிழ் வளர்ச்சித் துறை மானிய கோரிக்கையின் போது அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி இல்லை என்றால் அன்றைய தினத்தில், எங்களது உறுப்பினர்கள் இதுகுறித்து பேசுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *