தமிழ்நாடுக்கு திட்டங்களும் இல்லை! எரிவாயு உருளையும் இல்லை! தி.மு.க கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! தஞ்சாவூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பங்கேற்கிறார்

2 Min Read

சென்னை, மார்ச் 14- தமிழ் நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் என்.டி.ஏ. அரசையும் அதன் அடிமைக் கூட்டணியையும் கண் டித்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் 15.03.2026 அன்று காலை 10.30 மணிக்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார் பில் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும் என அறிவிக் கப்பட்டுள்ளது. இது குறித்து கூட்டணி சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்ப தாவது:-

எரிவாயு உருளை
தட்டுப்பாடு

ஒன்றிய பாஜக என்டிஏ அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையினாலும், முன்னெச் சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவும் இன்று நாடு முழுவதும் சமையல் எரிவாயு உருளைக்கும், – வணிக ரீதியிலான எரிவாயு உருளைக்கும் தட்டுபாடு ஏற்பட்டு மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

உணவகங்கள், வணிக நிறுவனங்கள் சரிவர இயங்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. சிறு-குறு தொழில்கள் உள்ள அதிக தொழில்வளமிக்க தமிழ்நாடு இந்த கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்பதால் ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலைமையை சரிசெய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தி இருந்தார்.

ஆனால், தற்போது வரை மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கி நிலைமையை சீராக்க முறையான நடவடிக்கை எடுக்க வில்லை ஒன்றிய என்.டி.ஏ. அரசு. நாடாளுமன்றத்தில் இதைப்பற்றி பேசவே பிரதமர் மறுத்து வருவது கண்டத்திற்குரியது.

அதோடு தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி , நூறு நாள் வேலை திட்ட நிதி, குடிநீர் இணைப்பு நிதி என எந்த நிதியையும் ஒதுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம், ஒசூர் விமான நிலையம் என எந்தவொரு வளர்ச்சித் திட்டத்திற்கும் அனுமதி தராமல் முட்டுக்கட்டை போட்டு வருவது. மும்மொழி திணிப்பு என்ற பெயரில் தமிழ்மொழியை அழிக்க துடிப்பது, கீழடி அகழ்வாய்வு முடிவுகளை ஏற்க மறுப்பது என தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு.

ஆர்ப்பாட்டம்

இப்படி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் என்.டி.ஏ. அரசையும் அதன் அடிமைக் கூட்டணியையும் கண்டித்து வரும் 15.3.2026 அன்று காலை 10.30 மணியளவில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி’ சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.

மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் – நிர்வாகிகள், அனைத்து அமைப்பு களில் உள்ள அணிகளின் நிர்வாகி கள்; உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மதச் சார்பற்ற கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள் அனைவரும் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கின்ற வகையில், மாவட்ட கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்து, தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் என்டிஏ அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *